தாம்பரம் அடுத்த முடிச்சூரில் இயங்கி வரும் செங்கல்பட்டு ரைபிள் கிளப்பில் துப்பாக்கி சுடும் பயிற்சியின் போது, துப்பாக்கி குண்டு பாயந்து 13 வயது சிறுவனுக்கு காயம் ஏற்பட்டது. ஏர் கண் வெடித்து அலுமினிய குண்டு சிறுவனின் பின் தலையில் பாய்ந்தது.
இதையடுத்து காயமடைந்த சிறுவனை குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
+ There are no comments
Add yours