தமிழகத்தில் கோடை வெயில் வாட்டி வதைக்கிறது. சுட்டெரிக்கும் வெயிலில் இருந்து தங்களை தற்காத்துக்கொள்ள பொதுமக்கள் வீடுகளுக்குள் முடங்கியுள்ளனர்.
இருப்பினும் வீட்டிற்குள்ளும் வெப்பமான சூழல் நிலவுவதால் பலரும், ஏசி, ஏர் கூலர் உள்ளிட்ட சாதனங்களை பயன்படுத்துகின்றனர்.
இப்படி கோடைக்காலத்தில் வெப்பத்திலிருந்து தற்காத்துக்கொள்ள இந்த மின்சாதன பொருட்களை பயன்படுத்துவதால் மின் கட்டணமும் அதிகரிக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. எனவே திட்டமிட்டு ஏசியை பயன்படுத்தினால் மின்சார கட்டணத்தை குறைக்க வாய்ப்புள்ளது.
அதன்படி ஏசி 24 மணி நேரத்தில் 1000 முதல் 3000 யூனிட் மின்சாரத்தை பயன்படுத்துகிறது. இது ஏசியின் டன் பொறுத்து மாறுபடும். பொதுவாக 1 டன், 1.5 ஏசிகளை பொதுமக்கள் பயன்படுத்துகின்றனர்.
1 டன் ஏசி என்றால் 1000 வாட்ஸ் மற்றும் 1.5 டன் என்றால் 1,500 வாட்ஸ். அதாவது 1 டன் ஏசி 1000 வாட்ஸ் மின்சாரத்தை செலவழிக்கும்.
அதுமட்டுமன்றி ஒரு டன் திறன் கொண்ட இரண்டு ஏசிகள் வெவ்வேறு சக்தியை பயன்படுத்துவதாக கூறப்படுகிறது. இது அவற்றின் மதிப்பீட்டை பொறுத்தது.
உதாரணமாக, உங்களிடம் 5 நட்சத்திரங்கள் கொண்ட 1 டன் ஏசி உள்ளது என வைத்துக்கொள்வோம். அது 1 மணி நேரத்தில் 1000 வாட்ஸ் அதாவது 1 யூனிட் மின்சாரத்தை பயன்படுத்தும்.
இதேபோல 5 நட்சத்திர மதிப்பீட்டைக் கொண்ட 1.5 டன் ஏசியை, ஒரு நாளைக்கு 8 மணி நேரம் பயன்படுத்தினால் மாதத்திற்கு சுமார் 360 யூனிட் மின்சாரம் பயன்படுத்தப்படும்.
அதன்படி ஒரு யூனிட் விலை ரூ.7 என்றால் 360 யூனிட்களுக்கு மாதம் ரூ.2,500 மின் கட்டணம் செலுத்த வேண்டியது இருக்கும்.
+ There are no comments
Add yours