மின்சாரத்தை உறிஞ்சும் ஏசி: மின் கட்டணத்தை குறைக்க சில டிப்ஸ்!!

Spread the love

கோடைகாலத்தில் அதிக வெப்பத்தின் காரணமாக மக்கள் ஏசியையும் ஏர்கூலரையும் அதிகம் பயன்படுத்துகின்றனர். ஏர் கூலரை விட ஏசி அதிகமான மின்சாரத்தை உறிஞ்சுகிறது.

இதனால் மின்சார கட்டணம் அதிகரிக்கிறது. மேலும் பெரும்பாலானோர் வீடுகளில் இரவு முழுவதும் ஏசியை பயன்படுத்துகின்றனர். இதனால் மின்சார கட்டணம் அதிகரிக்கிறது. மின்சார கட்டணத்தைக் குறைக்கும் சில வழிகளை இங்கே பாா்க்கலாம்.

ஏசியை ஆன் செய்யும் முன் அந்த அறையின் கதவு மற்றும் ஜன்னலை மூடவும். அதனால் அனல் காற்று உள்ளே வராது, குளிர் காற்று வெளியே போகாது. இல்லையெனில் உங்கள் ஏசி அதிகமாக வேலை செய்ய வேண்டியிருக்கும். மேலும் மின் கட்டணமும் அதிகமாகும்.

ஏசியை ஒருபோதும் குறைந்த வெப்பநிலையில் வைக்கக்கூடாது. ஏசியை 16 அல்லது 18 டிகிரியில் வைத்திருப்பது நல்ல குளிர்ச்சியை தருவதாக மக்கள் கருதுகின்றனர்.

நீண்ட நாட்கள் ஏசி நிறுத்தப்பட்டு இருந்தால் , ஏசியில் தூசி மற்றும் துகள்கள் அடைத்திருக்கும். ஏசியில் தூசி அடைத்திருக்கும் நிலையில், குளிர்ச்சியை தர மெஷின் நிறைய வேலை செய்யும். அதனால் மறக்காமல் சர்வீஸ் செய்ய வேண்டும்.

இப்போதெல்லாம் பெரும்பாலான ஏசிகள் ஸ்லீப் மோட் அம்சத்துடன் வருகின்றன. அவை தானாகவே வெப்பநிலை மற்றும் ஈரப்பதத்தை சரிசெய்துக் கொள்ளும். அதனால் 36 சதவீத மின்சாரத்தை சேமிக்க முடியும்.

நீங்கள் AC-யுடன் மின்விசிறியைப் பயன்படுத்தும்போது, அது அறையின் ஒவ்வொரு மூலைக்கும் AC காற்றை கொண்டுச் செல்லும். இதனால் அறை முழுவதும் குளிர்ச்சியாக இருக்கும். இதனுடன், ஏசியின் வெப்பநிலையைக் குறைக்க வேண்டிய தேவையும் ஏற்படாமல், மின்சாரத்தை சேமிக்கலாம்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours