ஃபோல்டபில் ஃபிலிப் ஸ்மார்ட்போனை ஒன்பிளஸ் நிறுவனம் வெளியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஒன்பிளஸ் நிறுவனம் வெளியிடக்கூடிய இந்த ஸ்மார்ட்போன் வரவிருக்கும் ஓப்போ Find ஃபிலிப் போனின் மறுபிராண்ட் செய்யப்பட்ட வெர்ஷன் என்றும் கூறப்படுகிறது.
மேலும் புகைப்படங்கள் எடுப்பதற்கு இது சாம்சங் கேலக்ஸி Z Flip 5 காட்டிலும் சிறப்பாக செயல்படும் என்றும் கூறப்படுகிறது.
ஒன்பிளஸ் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஓப்போ, அதன் வரக்கூடிய அடுத்த ஃபிலிப் போனில் டெலிபோட்டோ லென்ஸ் சேர்க்க இருப்பதாக சீன சோஷியல் மீடியா பிளாட்ஃபார்ம் ஒன்றில் பிகாச்சு என்ற டிப்ஸ்டர் பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளார்.
தற்போது பரவி வரும் புரளிகள் உண்மையாக இருக்கும் பட்சத்தில், ஒன்பிளஸ் அதன் முதல் ஃபிலிப் ஃபோல்டபில் போனில் பயன்படுத்தவுள்ள டெலிபோட்டோ லென்ஸ் பிற ஃபோல்டபில் ஆப்ஷன்களை காட்டிலும் குறிப்பிடத்தக்க நன்மை அளிக்க கூடியதாக இருக்கும்.
இதற்கிடையில், ஓப்போ Find N5 Flip ரத்து செய்யப்பட்டு விட்டதாக கூறப்பட்டது. இதனை ஒப்போ நிறுவனம் மறுத்து உள்ளது.
+ There are no comments
Add yours