FD திட்டங்களுக்கான வட்டி விகிதத்தில் மாற்றம்

Spread the love

இந்தியாவில் முதலீட்டு திட்டமாக ஃபிக்சட் டெபாசிட் திகழ்கிறது. இந்த திட்டத்தில் உத்தரவாதமான ரிட்டர்ன் தொகை மற்றும் பாதுகாப்பான முதலீடு என்ற காரணத்திற்காகவே பலர் ஃபிக்ஸட் டெபாசிட்டில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டுகிறார்கள்.

பொதுவாக ஃபிக்ஸட் டெபாசிட் திட்டத்தில் தனி நபர் தன்னிடமுள்ள பணத்தை குறிப்பிட்ட கலத்திற்கு ஒருவர் வங்கி அல்லது நிதி நிறுவனத்தில் மொத்தமாக முதலீடு செய்வார்.

டெபாசிட் செய்யப்படும் இந்த தொகைக்கு நிலையான வட்டி தரப்படுகிறது. ஃபிக்ஸட் டெபாசிட் கணக்குதாரர்கள் தங்கள் வட்டி தொகையை மாதத்திற்கு ஒருமுறையோ அல்லது காலாண்டோ, அரையாண்டோ அல்லது வருடத்திற்கு ஒருமுறையோ பெற்றுக்கொள்ளலாம்.

ஃபிக்ஸட் டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்ய வேண்டும் என யோசித்துக் கொண்டிருப்பவர்களாக இருந்தால், பொதுத்துறை வங்கியான யூனியன் பேங் ஆஃப் இந்தியாவில் கணக்கு தொடங்குவது நல்ல முடிவாக இருக்கும்.

ஏனென்றால் சமீபத்தில்தான் ரூ.2 கோடிக்கும் குறைவான ஃபிக்ஸட் டெபாசிட்களுக்கு வட்டி விகிதங்களை மாற்றியுள்ளது இந்த வங்கி.

2024-ம் ஆண்டு ஜூன் மாதம் 1-ம் தேதி முதல் இந்த மாற்றம் நடைமுறைக்கு வரும் என வங்கி தரப்பில் கூறப்பட்டுள்ளது.

7 முதல் 45 நாட்கள் வரையிலான ஃபிக்ஸட் டெபாசிட் திட்டத்திற்கு 3.5 சதவிகித வட்டி விகிதம் தருகிறது யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா.

அதேபோல் 46 நாட்கள் முதல் 90 நாட்கள் வரையிலான ஃபிக்ஸட் டெபாசிட் திட்டத்திற்கு 4.50 சதவிகிதம் தருகிறது. 91 நாட்கள் முதல் 180 நாட்களில் முதிர்வடையும் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டத்திற்கு 4.80 சதவிகிதமும், 181 நாட்கள் முதல் ஒரு வருடம் வரையிலான ஃபிக்ஸட் டெபாசிட் திட்டத்திற்கு 6.25 சதவிகிதம் வரை இந்த வங்கி வட்டி விகிதம் வழங்குகிறது.

ஒரு வருடம் முதல் 398 நாட்கள் வரையிலான ஃபிக்ஸட் டெபாசிட் திட்டத்திற்கு 6.75 சதவிகிதம் வட்டி விகிதம் தரப்படுகிறது.

குறிப்பாக 399 நாட்களில் முதிர்வடையும் ஃபிக்ஸட் டெபாசிட் திட்டத்திற்கு அதிகபட்சமாக 7.25 சதவிகிதம் வரை வட்டி கிடைக்கின்றது. 400 நாட்கள் முதல் 998 நாட்கள் வரையிலான ஃபிக்ஸட் டெபாசிட் திட்டத்திற்கு 6.50 சதவிகிதம் வட்டி விகிதம் தருகிறது.

1000 நாட்கள் முதல் பத்து வருடங்கள் வரையிலான நீண்ட கால ஃபிக்ஸட் டெபாசிட் திட்டத்திற்கு 6.50 சதவிகிதம் வரை வட்டி விகிதம் தரப்படுகிறது.

மற்றவர்களைக் காட்டிலும் ஃபிக்சட் டெபாசிட்டில் முதலீடு செய்யும் மூத்த குடிமக்களுக்கு 0.50 சதவிகிதம் கூடுதலாக வட்டி விகிதம் தரப்படுகிறது.

அதிகபட்சமாக 399 நாட்கள் வரையிலான ஃபிக்ஸட் டெபாசிட் திட்டத்தில் மூத்த குடிமக்கள் முதலீடு செய்தால் அவர்களுக்கு 7.75 சதவிகிதம் வரை வட்டி வழங்கப்படுகின்றது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours