இரண்டு நாட்களில் பவுனுக்கு ரூ.1040 உயர்ந்த தங்கம் விலை !

Spread the love

சென்னை: தங்கம் விலை இரண்டாவது நாளாக இன்று (நவ.19) மீண்டும் உயர்ந்துள்ளது. இரண்டு நாட்களில் பவுனுக்கு ரூ.1040 உயர்ந்துள்ளது.

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ஒரு கிராம் ரூ.7,065-க்கும், பவுனுக்கு ரூ.560 உயர்ந்து ஒரு பவுன் ரூ.56,520 உயர்ந்துள்ளது. வெள்ளியின் விலையும் கிராமுக்கு ரூ.2 உயர்ந்து ஒரு கிராம் ரூ.101-க்கு விற்பனையாகிறது. இரண்டு நாட்களில் பவுனுக்கு ரூ.1040 உயர்ந்துள்ளதால் தங்கம் விலை மீண்டும் ஏறுமுகத்திலேயே பயணிக்குமோ என்ற அச்சம் வாடிக்கையாளர்கள் மத்தியில், குறிப்பாக நடுத்தர மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.

போர் பதற்றத்தால்.. பொதுவாகவே சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நிர்ணயிக்கப்படுகிறது. அந்த வகையில், தீபாவளி நாளில் (அக்.31) ஒரு பவுன் ரூ.59,640 என்ற வரலாறு காணாத உச்சத்தை அடைந்தது. இந்நிலையில், கடந்த 14-ம் தேதி பவுனுக்கு ரூ.880 குறைந்து, ஒரு பவுன் ரூ.55,480-க்கு விற்கப்பட்டது. அதன் பின்னர் தங்கம் விலை தொடர்ச்சியாக குறைந்து வருவது நகை வாங்குவோர் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. கடந்த வாரம் முழுவதும் விலை குறைந்து வாடிக்கையாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய தங்கம் விலை இந்த வாரத்தில் தொடர்ந்து 2வது நாளாக உயர்ந்துள்ளது.

ரஷ்யா மீது நீண்ட தூரம் சென்று தாக்கக்கூடிய ஏவுகணைகளைப் பயன்படுத்த அமெரிக்க அதிபர் பைடன் அனுமதியளித்துள்ளது இதற்கு முக்கியக் காரணமாக பார்க்கப்படுகிறது.

முன்னதாக ஜி20 உச்சி மாநாட்டில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி “பல்வேறு நாடுகளிடையே நீண்ட காலமாக நீடிக்கும் போர்கள் மற்றும் போர் பதற்றத்தால் தெற்கு நாடுகளில் உணவு, எரிபொருள், உரங்களுக்கு தட்டுப்பாடு ஏற்படுகிறது” என்று கவலை தெரிவித்திருந்தது நினைவுகூரத்தக்கது.

தொழில்நுட்ப வளர்ச்சிகளின் காரணத்தால், புவியின் எந்தப் பகுதியில் போர் நடந்தாலும் அது மற்ற பிற பகுதிகளை வர்த்தக ரீதியாக, வளர்ச்சி ரீதியாக பாதிக்கக்கூடிய உலகளாவிய கிராமத்தில் தான் நாம் வாழ்கிறோம்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours