பங்குச் சந்தை; 15 சதவீதம் வரை உயர வாய்ப்புள்ள பங்குகள்!

Spread the love

இந்தியப் பங்குச் சந்தைகளில் சில பங்குகள் குறுகிய காலத்தில் அதிக லாபம் தரும் என ஆக்சிஸ் செக்யூரிட்டீஸ் தரகு நிறுவனத்தால் கணிக்கப்பட்டுள்ளது. அந்த பங்குகளின் பட்டியலை பின்வருமாறு காணலாம்!

  1. டெக் மகிந்திரா

டெக் மஹிந்திரா பங்குகளை ரூ.1,377.60 விலை ரேஞ்சில் வாங்கலாம் என முதலீட்டாளர்களுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. பங்கு முந்தைய நாளில் ரூ.1,377.60 விலையில் முடிவானது. பங்கு Stop Loss அதாவது இழப்பை நிறுத்த ரூ.1,253 விலையை நெருங்கும்பொழுது இந்த ஆஃப்சனை தேர்வு செய்யவும்.

மேலும் பங்கிற்கான இலக்கு விலை ரூ.1,505 முதல் ரூ.1550 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த பங்கு வரும் வாரங்களில் 13% உயர்வை பதிவு செய்யும் என கணிக்கப்பட்டுள்ளது.

  1. ரேமோண்ட்

இந்த பங்கு முந்தைய நாள் முடிவில் ரூ.2,471.65 விலை அளவில் வர்த்தகமானது. இந்த பங்கு வரும் வாரங்களில் 15% உயர்வை பதிவு செய்யும் என கணிக்கப்பட்டுள்ளது.ராமண்ட் பங்கிற்கான இலக்கு விலை அதாவது டார்கெட் விலை ரூ.2,713-2,830 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பங்கை ரூ.2,385-2,337 விலை ரேஞ்சில் வாங்கவும், மேலும் பங்கு இழப்பை நிறுத்த விலை ரூ. 2,185 ஆக பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

  1. எரிஸ் ஃலைப் சயின்ஸ்

இந்நிறுவனத்தின் பங்கு விலை இனி வரும் வாரங்களில் 12% உயரும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. இந்த பங்கை ரூ.980-962 விலையில் வாங்கலாம், பங்கிற்கான இலக்கு விலையாக ரூ.1,065-1,113 ஆகவும் கணிக்கப்பட்டுள்ளது. மேலும் இழப்பை நிறுத்த பங்கின் விலை ரூ.925 நெருங்கும்பொழுது நிறுத்தவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

  1. கோடக் மகிந்திரா வங்கி

இந்நிறுவனத்தின் பங்கு விலை இனி வரும் வாரங்களில் 6% உயரும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. இந்த பங்கை ரூ.1,730-1,760 விலையில் வாங்கலாம், பங்கிற்கான இலக்கு விலையாக ரூ.1,850 ஆகவும் கணிக்கப்பட்டுள்ளது. மேலும் இழப்பை நிறுத்த பங்கின் விலை ரூ.1,690 நெருங்கும்பொழுது நிறுத்தவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

  1. திவிஸ் லேபரேட்டரீஸ்

இந்த பங்கு முந்தைய நாள் முடிவில் ரூ.4,524.05 விலை அளவில் வர்த்தகமானது. இந்த பங்கு வரும் வாரங்களில் 11% உயர்வை பதிவு செய்யும் என கணிக்கப்பட்டுள்ளது. பங்கிற்கான இலக்கு விலை அதாவது டார்கெட் விலை ரூ.5,000 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பங்கை ரூ.4,480-4,530 விலை ரேஞ்சில் வாங்கவும், மேலும் பங்கு இழப்பை நிறுத்த விலை ரூ. 4,260 ஆக பரிந்துரைக்கப்பட்டுள்ளது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours