திருவாரூர் மாவட்டத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கான நீட் பயிற்சி வகுப்புகள் கடந்த மார்ச் 25 ம் தேதி தொடங்கி பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வந்தது.
திருவாரூர் புலிவலம் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் மன்னார்குடி தனியார் பள்ளியில் பயிற்சி வகுப்பு நடைபெற்றது.
இந்த சிறப்பு வகுப்பில் 248 மாணவிகள் 40 மாணவர்கள் என மொத்தம் 288 மாணவ- மாணவிகள் பங்கேற்றனர். இப் பயிற்சி வகுப்பு நேற்றுடன் நிறைவு பெற்ற நிலையில் வரும் மே-5 ம் தேதி நீட் தேர்வு நாடு முழுவதும் நடைபெற உள்ளது.
பள்ளி கல்வித்துறையின் வழிகாட்டுதலின் பெயரில் திருவாரூர் மாவட்டத்தில் நடைபெற்ற பயிற்சி வகுப்பில் இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் என மொத்தம் 16 ஆசிரியர்கள் பயிற்சி அளித்து வந்தனர்.
அரசு பள்ளி மாணவ, மாணவிகள் அதிக எண்ணிக்கையில் நீட் தேர்வில் பங்கேற்கும் விதமாக சிறப்பு பயிற்சி வகுப்பு நீட் பயிற்சி வகுப்புக்காகஇணையதள வசதி மற்றும் ஸ்மார்ட் கிளாஸ் வசதி உடைய பள்ளிகளை பயிற்சி மையங்களாக தேர்வு செய்யப்பட்ன.
தொடர்ந்து,பயிற்சி மையங்களில் தமிழ் மற்றும் ஆங்கில வழியில் பயிற்சிகள் மற்றும் தேர்வுகள் நடைபெற்று நேற்றுடன் பயிற்சி வகுப்புகள் நிறைவடைந்தன.
+ There are no comments
Add yours