நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் 5ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு டிஜிட்டல் வழிக் கல்வி நடத்த வேண்டும் என ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மத்திய அரசு மாணவர்களின் கல்வி மேம்பாட்டிற்காக பல்வேறு திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. அந்த வகையில் ஒருங்கிணைந்த சமக்ர சிக் ஷா கல்வி திட்டத்தின் கீழ் தொடக்க நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு டிஜிட்டல் வழி கல்வி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
அதாவது அனைத்து பள்ளிகளிலும் ஸ்மார்ட் கிளாஸ் என்ற நவீன டிஜிட்டல் வழி வகுப்புகளுக்கான கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட இருக்கிறது. இந்தத் திட்டத்திற்காக கிராமப்புறங்களில் இணைய இணைப்புகள் கொண்டுவரப்பட்டுள்ளன.
இந்த பணிகள் ஜூன் மாதத்திற்குள் நிறைவு பெற இருக்கிறது. அதன்பின் புதிய கல்வி ஆண்டில் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு அனிமேஷன் வகை வீடியோக்களை பாடங்களை நடத்துவதற்கு தொடக்கக் கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் மாணவர்களுக்கான பாடங்கள் மணற்கேணி என்ற செயலியில் இருப்பதாகவும் அதனை பதிவிறக்கி பாடங்களை நடத்த வேண்டும் என ஆசிரியர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
+ There are no comments
Add yours