விருதுநகர் மாவட்டம் ஶ்ரீ ரமணாஸ் அகாடமி பள்ளியில் 8ஆம் வகுப்பு படித்து வரும் அவந்திகா மற்றும் நேத்ரா ஆகியோர் அடல் டிங்கரிங் லேப் திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்றவர்கள் ஆவார்கள்.
இவர்கள், இன்றைய இளையோரும் விவசாயத்தை பற்றி தெரிந்து கொள்ளும் வகையில்,“ மாடர்ன் விவசாயி” என்ற செயலியை உருவாக்கியுள்ளனர்.இந்தச் செயலியில், மழைக்காலம், வெயில் காலம் என மூன்று காலத்திற்கும் என்ன பயிர் செய்யலாம்? எப்போது விதைக்கலாம்? அறுவடை காலம் எப்போது? உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் உள்ளன.
உலகமே நவீனத்தை நோக்கி சென்று கொண்டிருக்கும் போது எல்லாமே மொபைல் ஆப்களில் எளிதாக கிடைக்கும் போது விவசாயம் செய்வதற்கான வழிமுறைகளும் இனி கிடைக்கும் என்பதற்கு இது ஒரு நல்ல உதாரணம் ஆகும்.
+ There are no comments
Add yours