மேகமலை வழிவிடும் முருகன் கோவில் தெரியுமா? வியக்க வைக்கும் சிறப்புகள்!

Spread the love

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே தென்பழனி பகுதியில் அமைந்துள்ளது தென் பழனி வழி விடும் முருகன் கோயில். தேனி மாவட்டத்தில் மிகவும் புகழ்பெற்ற சுற்றுலா தளமான மேகமலைக்கு செல்லும் வழியில் அமைந்துள்ள இந்த கோயில் சுற்றுலா பயணிகளின் விருப்பமான தலமாகவும் மிகவும் உள்ளது.

மேகமலை பகுதிக்கு செல்லும் பொதுமக்களும் சுற்றுலா பயணிகளும் பாதுகாப்பான பயணத்தை மலைச்சாலையில் மேற்கொள்வதற்கு முன் இந்த கோயில் வழிபாடு நடத்திய பின்னரே செல்வர்.

தென் பழனி பகுதியில் உள்ள ஸ்ரீ வழிவிடும் முருகனுக்கு தை மற்றும் பங்குனி மாதங்களில் சிறப்பு பூஜை நடைபெறும். பங்குனி உத்திரம், தைப்பூசம் போன்ற நாட்களில் இந்த கோவிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடி இருப்பதை காண முடியும்.

சிறப்பு நாட்களில், சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளும் முருகப்பெருமானுக்கு, இளநீர், பன்னீர், பால், தயிர், சந்தனம், விபூதி உள்ளிட்ட சகல திரவியங்களால் அபிஷேகம் செய்யப்படுவதை கான அதிகளவில் பக்தர்கள் வருவது கூடுதல் சிறப்பாகும். மேலும் சுவாமிக்கு கிரீடம், மலர் மாலை அணிவிக்கப்பட்டு ராஜஅலங்காரத்தில் அருள்பாலிப்பார்.

அதுமட்டுமல்லாமல் பழனி, திருச்செந்தூர், திருத்தணி போன்ற கோவில்களுக்கு முருக பக்தர்கள் செல்லும் முன் தேனி மாவட்டத்திலுள்ள முருக பக்தர்கள் இந்த கோவிலுக்கு பாதயாத்திரையாக வந்து பால் குடம் செலுத்திய பின்னரே பெரிய திருத் தலங்களுக்குச் செல்வது வழக்கமாக வைத்துள்ளனர்.

இந்த வழிவிடும் முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்கள், முருகனுக்கு அபிஷேகம் செய்தும் எலுமிச்சை விளக்கு செய்தும், கூடுதல் சில சிறப்பு பரிகாரங்கள் செய்வதன் மூலமும் திருமணத்தடை உள்ளவர்களுக்கு தோஷம் நீங்கி விரைவில் திருமணம் நடக்கும் என்கின்றனர் இப்பகுதி மக்கள்.

ஸ்ரீ வழிவிடும் முருகனுக்கு அபிஷேகங்கள் ஆராதனைகள் நடைபெறும் போது, வழிவிடும் முருகன் ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் சமயத்தில் திருமணத்தடை மற்றும் குழந்தை பிறக்காதவர்கள் தங்களது நேர்த்திக் கடனை செலுத்தும்போது விரைவில் வேண்டுதல்கள் நிறைவேறும் என்பதும் நம்பிக்கையாக உள்ளது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours