தென் இந்தியப் பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. இதனால், இன்றும் நாளையும் தமிழ்நாடு, புதுச்சேரியில் வறண்ட வானிலை நிலவும் என்றும் வெப்ப அலை வீசும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், 08.04.2024 அன்று கடலோர தமிழக மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
09.04.2024 அன்று தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
வரும் 10.04.2024 அன்று தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வட தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
மேலும் 11.04.2024 மற்றும் 12.04.2024 ஆகிய தேதிகளில் தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வட தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
வெப்ப அலை
6.04.2024 முதல் 10.04.2024 வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த இரு தினங்களுக்கு அதிகபட்ச வெப்ப நிலையில் மாற்றம் ஏதும் இல்லை. அதற்கு அடுத்து வரும் மூன்று தினங்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை 2° – 3° செல்சியஸ் வரை படிப்படியாக குறையக்கூடும்.
06.04.2024 மற்றும் 07.04.2024 ஆகிய தேதிகளில் அடுத்த இரண்டு தினங்களில் அதிகபட்ச வெப்பநிலை வட தமிழக உள் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் 40°– 41° செல்சியஸ், உள் மாவட்டங்களின் சமவெளி பகுதிகளில் அநேக இடங்களில் 38°– 40° செல்சியஸ் மற்றும் கடலோரப்பகுதிகளில் 34° – 37° செல்சியஸ் இருக்கக்கூடும்.
மேலும், 09.04.2024 மற்றும் 10.04.2024 ஆகிய தேதிகளில் வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை வீசக்கூடும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
+ There are no comments
Add yours