வெயில் காலங்களில் சருமத்தில் ஏற்படும் கருமை நீங்கவும் சருமம் பொலிவு பெறவும் சில குறிப்புகளை இங்கே காணலாம்.
அரிசி களைந்த நீர்:
தினமும் அரிசி களைந்த நீரில் முகம் கழுவினால் சருமத்தில் உள்ள அழுக்குகளை மட்டும் நீக்காமல் உள்ளிருக்கும் அதிக எண்ணெய் மற்றும் கரும்புள்ளிகளை அகற்றும்.
முகத்தை கழுவது மிகவும் அவசியம்:
தினமும் முகத்தை மூன்று அல்லது நான்கு முறையாவது குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும், இதனால் சருமத்தில் இருக்கும் அழுக்குகள் நீங்கி முகம் பொலிவாக காணப்படும்.
ஆவிப் பிடித்தல்:
சருமத்தை ஆரோக்கியமாக பாதுகாக்கவும், சருமம் பொலிவாக, சருமத்தில் ஏற்படும் பருக்கள் மறையவும் தினமும் ஒரு முறையாவது ஆவிப் பிடிப்பது மிகவும் நல்லது, இவ்வாறு செய்வதினால் சரும செல்களுக்கு புத்துயிர் அளிக்கின்றது, இதனால் சருமம் என்றும் பொலிவுடன் காணப்படும்.
பழங்களில் மாஸ்க்:
முகம் பொலிவுடன் இருக்க வேண்டும் என்று கடைகளில் விற்கும் ஃபேஸ் மாஸ்க்குகளை போடுவதற்கு பதிலாக, பழங்களை வைத்து மாஸ்க் போட்டால், அதில் உள்ள சத்துக்கள் முகத்தை பளிச்சென்று பொலிவுற வைக்கும்.
அதிலும் மாம்பழம், பப்பாளி, எலுமிச்சை, திராட்சை, ஸ்ட்ராபெர்ரி போன்றவை மாஸ்க் போடுவதற்கு மிகவும் சிறந்த பழங்கள்.
சருமம் பொலிவு பெற சூப்பர் மாய்ஸ்சுரைசர்:
சருமத்திற்கு க்ரீம்கள் மற்றும் லோசன்கள் பயன்படுத்துவதற்கு, தேங்காய் எண்ணெய் அல்லது கடுகு எண்ணெயை தடவினால், சருமம் மென்மையாக, ஈரப்பதத்துடன், சுருக்கமின்றி இருக்கும்.
+ There are no comments
Add yours