உணவின் சுவையை கூடும் சுவையான தக்காளி ஊறுகாய் எப்படி செய்யலாம் என்று இப்போது பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
தக்காளி- அரை கிலோ
மிளகாய் தூள்- 2 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள்- கால் டீஸ்பூன்
புளி- பெரிய நெல்லிக்காய் அளவு
உப்பு- தேவைக்கேற்ப அளவு
கடுகு- அரை டீஸ்பூன்
வெந்தயம்- அரை டீஸ்பூன்
நல்லெண்ணெய்- தேவைக்கேற்ப
தாளிக்க :
கடுகு – அரை டீஸ்பூன்
பெருங்காயம் கால் டீஸ்பூன்
எண்ணெய்- தேவைக்கேற்ப
செய்முறை:
தக்காளியை முதல் நாள் இரவு நன்றாக அலசி, இரண்டாக நறுக்கி ஒரு ப்ளாஸ்டிக் கன்டைனரில் போட்டு சிறிதளவு உப்பு சேர்த்து, கைபடாமல் குலுக்கி வைத்து விட வேண்டும். இரவு முழுவதும் ஊறி தக்காளியில் நீர் விட்டிருக்கும்.
இந்த உப்பு நீரிலேயே ஊறுகாய்க்கு பயன்படுத்தப் போகும் புளியை போட்டு வைத்து ஊற விட வேண்டும்.
மறுநாள், தக்காளி துண்டுகளை கைகளை உபயோகிக்காமல், ஒரு கரண்டியால் எடுத்து ஒரு தட்டில் வைத்து வெயிலில் காய வைக்கவும். அந்த உப்பு நீரையும் வெயிலில் வைக்கவும்.
மாலையில் தக்காளி துண்டுகளை அதே உப்பு நீரில் சேர்த்து மூடி வைத்து விடவும். மீண்டும் மறுநாள் காலையில் தக்காளி துண்டுகள் தனியே, உப்பு நீர் தனியே பிரித்து வெயிலில் வைத்து காய வைக்கவும். இரண்டு மூன்று நாட்கள் வெயிலில் வைத்தால் போதும். தக்காளி துண்டுகள் நன்றாக சுருங்கிவிடும். உப்பு நீரும் வச்சிவிடும்.
மிக்சியில் தக்காளி துண்டுகள், புளி மற்றும் வற்றியுள்ள உப்பு நீர் சேர்த்து மைய அரைத்துக் கொள்ளவும்.
வெறும் கடாயில் கடுகு, வெந்தயம் சேர்த்து கொள்ளவும். வறுத்து, பொடித்துக் அதே கடாயில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு பொரிந்ததும், பெருங்காயம் சேர்த்து தாளித்துக் கொள்ளவும்.
இதில் அரைத்த தக்காளி-புளி விழுது சேர்த்து நன்றாக வதக்கவும். வெயிலில் காய வைத்திருப்பதால் விரைவிலேயே தக்காளி வதங்கி விடும்.
இதனுடன் மிளகாய் தூள் சேர்த்து வதக்கவும். சிறிதளவு எண்ணெய் சேர்த்துக் கொள்ளவும். பின்னர் இதனுடன் உப்பு தேவையான அளவு சேர்த்துக் கொள்ள வேண்டும்.
இப்போது பொடித்து வைத்துள்ள கடுகு-வெந்தயம் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து எண்ணெய் பிரிந்து வரும் வரை ஆற வைக்கவும். இப்போது சுவையான தக்காளி ஊறுகாய் தயார்.
தக்காளி ஊறுகாயை ஈரமற்ற பாட்டிலில் போட்டு காற்று புகாதபடி சேமித்து வைக்கவும். இந்த ஊறுகாய் சாதத்துடன் பிசைந்து சாப்பிட சுவையாக இருக்கும். சாம்பார் சாதம், தயிர் சாதத்துடன் தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும்.
+ There are no comments
Add yours