திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தும் உண்டியல் வருவாய் மாதந்தோறும் எண்ணப்படுகிறது.
கோயில் வசந்த மண்டபத்தில் அறங்காவலர் குழுத் தலைவர் ரா. அருள்முருகன் தலைமையில் இணை ஆணையர் மு.கார்த்திக் முன்னிலையில் நேற்று புதன்கிழமை உண்டியல் வருவாய் எண்ணப்பட்டது.
இதில் தூத்துக்குடி உதவி ஆணையர் செல்வி, கோயில் கண்காணிப்பாளர் கோமதி, ஆய்வர் செந்தில்நாயகி, அறங்காவலர் குழுத் தலைவரின் நேர்முக உதவியாளர் செந்தமிழ்பாண்டியன், பொதுமக்கள் பிரதிநிதிகள் கருப்பன், மோகன், சிவகாசி பதினெண் சித்தர் மடம் குருகுல வேத பாடசாலை உழவார பணிக்குழுவினர் மற்றும் கோயில் பணியாளர்கள் ஈடுபட்டனர்.
இதில் ரொக்கமாக ரூ.4 கோடியே 98 லட்சத்து 7,405 கிடைத்துள்ளது. தங்கம் 3 கிலோ 400 கிராம், வெள்ளி 54 கிலோ 500 கிராம், பித்தளை 99 கிலோ, செம்பு 15 கிலோ, தகரம் 7 கிலோ மற்றும் 851 வெளிநாட்டு பணத்தாள்களையும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர்
+ There are no comments
Add yours