நாம் அனைவரும் அடிக்கடி பார்க்கக் கூடிய மற்றும் எளிதாக கிடைக்கக்கூடிய ஒரு மருத்துவ குணம் மிகுந்த மரம் என்றால் அது வேப்பமரம் தான்.
சாலை ஓரங்களில் நிழல்களுக்காக வைக்கப்படும் இந்த வேப்பமரம் அதிகப்படியான மருத்துவ குணங்களை கொண்டுள்ளது. இந்த வேப்பமரம் நிழலை தருவது மட்டுமல்லாமல் தூய்மையான காற்றையும் நமக்கு கொடுக்கிறது.
வேப்ப மரத்தில் உள்ள அனைத்து பாகங்களும் மருத்துவ குணம் உள்ளது. இது பலவிதமான நோய்களை தீர்க்கும். அவற்றில் சிலவற்றை பார்க்கலாம்
வயிற்றில் பூச்சி இருந்தால் தினமும் வேப்பம் பழத்தை சாப்பிடுங்கள். பூச்சிகள் வெளியேறிவிடும்.
வேப்பிலை, எலுமிச்சம் பழச் சாற்றில் அரைத்துத் தலைக்குத் தேய்க்க, பித்தத்தால் வரும் மயக்கம் குணமாகிவிடும்.
வேப்பம் பூவை உண்டு வந்தால் வாந்தி மயக்கம் குணமாகும். பசி உண்டாகும். நோய் எதிர்ப்பு செல்கள் அதிகரிக்கும்.
சர்க்கரைவியாதியை கட்டுக்குள் கொண்டுவர தினமும் வேப்பங்க்காயை சாப்பிட்டு வாருங்கள். மாத்திரையின்றி கட்டுக்குள் கொண்டு வரலாம்.
வேப்பங்குச்சியை பயன்படுத்தி பல் விலக்க. பல் சம்மந்தமான அனைத்துப் பிரச்சனைகளும் தீரும்.
வேப்பிலை மற்றும் மஞ்சள் சேர்த்து அரைத்து நகச்சுத்திக்கு பற்று போட்டால் சீக்கிரத்தில் குணமாகும்.
வேப்பமுத்து, மிளகு, கருஞ்சீரகம் மூன்றையும் அரைத்து எண்ணெய்யில் கலந்து தலைக்குத் தேய்த்து முழுகி வரப் புழுவெட்டு மாறும். முடி செழித்து வளரும்.
வேப்பம் பிண்ணாக்கு ஒத்தடம் உடல் வலியை உடனே நீக்கும்.
+ There are no comments
Add yours