பெரும்பாலான மக்கள் விரும்பி உண்ணக்கூடிய உணவு வகைகளில் மீன் குழம்பு ஒன்றாகும். அதிலும் நெத்திலி மீன் குழம்பு மிகவும் சுவையாக இருக்கும். இந்த சுவையான நெத்திலி மீன் குழம்பினை எப்படி தயார் செய்யலாம் என்று இப்போது பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
நெத்திலி மீன்- 3/4 கிலோ
எண்ணெய்- 3 டேபிள்ஸ்பூன்
கடுகு
வெந்தயம்
கறிவேப்பிலை
புளி- 1பெரிய நெல்லிக்காய் அளவு
வறுத்து அரைக்க
தனியா- 2 டேபிள் ஸ்பூன்
சீரகம்- 1 டீஸ்பூன்
மிளகு -1 டீஸ்பூன்
வர மிளகாய்- 12
பச்சரிசி- 1/4 டீஸ்பூன்
அரைக்க
சின்ன வெங்காயம்- 1/2 கிலோ
பூண்டு பல்- 15
தக்காளி- 1
உப்பு
எண்ணெய் -1/4 கப்
செய்முறை;
ஒரு பாத்திரத்தில் புளி சேர்த்து தண்ணீர் ஊற்றி ஊற வைத்துக்கொள்ளவும். கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் சின்ன வெங்காயம், பூண்டு சேர்த்து மிதமான தீயில் வதக்கவும்.
இப்போது தக்காளி, உப்பு, தக்காளி சேர்த்து நன்றாக மசியும் வரை வதக்க வேண்டும். பிறகு இதில் அரைத்து வைத்துள்ள மசாலா பொடியை சேர்த்து நன்றாக கலந்து ஆறவிடவும். ஆறிய பிறகு மிக்ஸியில் சிறிது தண்ணீர் விட்டு மையாக அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
ஒரு மண் பாத்திரத்தில் எண்ணெய் விட்டு எண்ணெய் சூடானவுடன் கடுகு, வெந்தயம், கருவேப்பிலை சேர்த்து தாளிக்கவும். பிறகு அதில் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து 2 நிமிடம் மிதமான தீயில் நன்றாக கலக்கவும் இப்போது இதில் தண்ணீர் விட்டு மிதமான தீயில் கொதிக்கவிடவும்.
ஒரு கொதி வந்த பிறகு இதில் ஊற வைத்த புளியை நன்றாக கரைத்து வடிகட்டி இதில் சேர்க்கவும். இப்ப இவற்றை மிதமான தீயில் ஐந்து நிமிடம் நன்றாக கொதிக்கவிடவும் உப்பு சரிபார்த்து தேவை எனில் சேர்த்துக் கொள்ளவும்
இப்போது கழுவி சுத்தம் செய்து வைத்துள்ள நெத்திலி மீனை இதில் சேர்த்து ஒரு கொதி வந்த பிறகு அடுப்பை அணைத்து மூடி 15 நிமிடம் வைக்கவும் 15 நிமிடம் கழித்து எண்ணெய் பிரிந்து நம்முடைய நெத்திலி மீன் குழம்பு தயார்.
சுவையான நெத்திலி மீன் குழம்பினை சுடு சோறுடன் சேர்த்து சாப்பிட மிகவும் துணையாக இருக்கும்.
+ There are no comments
Add yours