முளைகட்டிய தானியக் குழம்பினை வாரம் ஒரு முறை உணவில் சேர்த்துக் கொண்டால் உடலுக்கு தேவையான ஆற்றலையும் சத்துக்களையும் கொடுக்கிறது. இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் உண்ணக்கூடிய ஒரு சத்தான உணவாகும். உடலுக்கு ஆரோக்கியத்தை கொடுக்கும் ஒரு சுவையான முளைகட்டிய தானிய குழம்பு எப்படி செய்யலாம் என்று இப்போது பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
முளை கட்டிய தனியங்கள் -1 கப்
பெரிய வெங்காயம் – 1
தக்காளி – 2
மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்
உப்பு
தண்ணீர்
அரைக்க:
பச்சை மிளகாய் – 4
இஞ்சி -1 சிறிய துண்டு
தேங்காய் துருவல் -4 டீஸ்பூன்
கொத்தமல்லி இலை -1 கட்டு
தாளிக்க
ஆயில் -2 டீஸ்பூன்
சீரகம்
செய்முறை:
முளை கட்டிய தானியங்களை கழுவி,குக்கரில் போட்டு தண்ணீர் ஊற்றி 1 விசில் விட்டு வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
வெங்காயம் பொடியாக நறுக்கி எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். தக்காளியை மிக்ஸியில் அரைத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் மிக்ஸியில் பச்சை மிளகாய், தேங்காய் துருவல், இஞ்சி, கொத்தமல்லிஇலை சேர்த்து பச்சயாக அரைக்கவும்.
கடாயில் எண்ணெய் சேர்த்து அதில் சீரகத்தை சேர்த்து இதனுடன் வெங்காயம் சேர்த்து வதக்க வேண்டும்.
அரைத்த விழுதை சேர்த்து பச்ச வாசனை போகும் வரை வதக்கி மஞ்சள் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் இதனுடன் அரைத்த தக்காளி ஜூஸ் சேர்த்து கொதித்த உடன் அதில் வேக வைத்த முளை கட்டிய தானியங்களை சேர்த்து நன்கு கலக்கி விட வேண்டும். இப்போது சுவையான முளைகட்டிய தானிய குழம்பு தயார்.
இந்த குழம்பு சுடு சோறு, சப்பாத்தி, தோசை, இட்லிக்கு ஏற்றதாக இருக்கும்.
+ There are no comments
Add yours