ஃபாஸ்ட் ஃபுட் என்றால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணும் உணவாக அமைந்துள்ளது.
நூடுல்ஸ், ஃபிரைட் ரைஸ் போன்ற ஃபாஸ்ட் ஃபுட் உணவுகள் உடலுக்கு கேடு விளைவிக்கும் என்பதால் மருத்துவர்கள் உணவு பட்டியலில் இதை தவிர்க்குமாறு அறிவுறுத்துகின்றனர்.
ஆனால் குழந்தைகள் விரும்பி உண்ணக்கூடிய ப்ரைடு ரைஸ் ஆரோக்கியமான முறையில் வரகரிசியை பயன்படுத்தி எவ்வாறு செய்யலாம் என்று இப்போது பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
2கப் -வேக வைத்த வரகு அரிசி
3ஸ்பூன் -எண்ணெய்
2ஸ்பூன் -நறுக்கிய கேரட்
2ஸ்பூன் -நறுக்கிய பீன்ஸ்
2ஸ்பூன் -நறுக்கிய சிகப்பு குடைமிளகாய்
2ஸ்பூன் -நறுக்கிய பச்சை குடைமிளகாய்
2ஸ்பூன் -நறுக்கிய மஞ்சள் குடைமிளகாய்
2ஸ்பூன் -கார்ன்
தேவையானஅளவு வெங்காயத் தாள்
தேவையானஅளவு உப்பு
1/2ஸ்பூன் -மிளகு தூள்
செய்முறை
முதலில் கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் கேரட், பீன்ஸ், குடைமிளகாய், வெங்காயத்தாள், கார்ன் சேர்த்து நன்றாக வதக்கவும் வதங்கியதும் அதனுடன் நாம் வேகவைத்துள்ள வரகு அரிசி சாதத்தையும் சேர்க்கவும்.
எல்லாம் ஒன்றாக வதங்கியதும் அதனுடன் உப்பு, மிளகுத்தூள் சேர்த்து நன்றாக கலக்கவும்.
எல்லாம் ஒன்றாக கலந்ததும் இறுதியாக அதனுடன் வெங்காயத்தாள் சேர்க்க வேண்டும். இப்போது சுவையான 10 நிமிடத்தில் செய்யக்கூடிய வரகரிசி பிரைடு ரைஸ் தயார்.
இதில் உள்ள காய்கறிகளும், சத்தான அரிசியும் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். இது மிகவும் ஆரோக்கியமான உணவாகும்.
+ There are no comments
Add yours