வாட்ஸ்அப் மூலமாக வெளிநாடுகளுக்கு பணம் அனுப்புவது எப்படி?

Spread the love

வாட்ஸ்அப் செயலி மூலமாக வெளிநாடுகளுக்கு பணம் அனுப்பும் வசதி விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்அப் பயனர் அனுபவத்தை மேம்படுத்துவதற்காக தொடர்ந்து பல்வேறு விதமான அம்சங்களை இதற்கு முன்பு அறிமுகப்படுத்தியது.

மேலும் தொடர்ந்து இன்னும் எக்கச்சக்கமான அம்சங்களை வெளியிட்டு வருகிறது. தற்போது சமீபத்தில் வெளியான அறிக்கைகளின் படி வாட்ஸ்அப் அதன் யூசர்களை வெளிநாட்டு ட்ரான்ஸாக்ஷன்களை செய்வதற்கு அனுமதிப்பதற்கான வேலைகளில் ஈடுபட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்தியாவில் உள்ள யூசர்கள் வாட்ஸ்அப் பயன்படுத்தி சர்வதேச பேமெண்ட்களை செய்வதற்கான புதிய அம்சத்தை தற்போது உருவாக்கி வருகிறது.
இது ஏற்கனவே அப்ளிகேஷனில் ஒரு பகுதியாக இருக்கக்கூடிய யூனிஃபைடு பேமெண்ட் இன்டர்ஃபேஸ் (Unified Payments Interface – UPI) மூலமாக சாத்தியமாக்கப்படும்.

இந்த அம்சம் இன்டர்நேஷனல் பேமெண்ட் (International Payments) என்ற பெயருடன் அழைக்கப்பட உள்ளது. இதனை பயன்படுத்தி இந்திய வங்கி அக்கவுண்ட் ஹோல்டர்கள் வெளிநாடுகளுக்கு பணத்தை ட்ரான்ஸ்ஃபர் செய்யலாம்.

எனினும் சர்வதேச UPI சேவைகளை எனேபிள் செய்துள்ள வங்கிகள் கொண்ட நாடுகளுக்கு மட்டுமே இந்த அம்சத்தை ஒருவர் பயன்படுத்த முடியும்.

மேலும், போர்டலில் ஷேர் செய்யப்பட்டுள்ள ஸ்கிரீன்ஷாட்டின் படி, ஸ்டேட்டஸ் அப்டேட்டுகளுக்கு பல்வேறு மீடியா ஃபார்மெட்டுகளில் மாறுவதற்கு புதிய கம்போசரை வாட்ஸ்அப் வடிவமைத்துள்ளது.

ஸ்டேட்டஸ் அப்டேட் ஸ்கிரீனின் கீழ்ப்புறத்தில் காணப்படும் டெக்ஸ்ட், வீடியோக்கள் அல்லது போட்டோக்களை தேர்வு செய்து யூசர்கள் அதனை ஸ்டேட்டஸில் ஷேர் செய்யும் ஆப்ஷனை பெறுவார்கள். இங்கிருந்து ஒருவர் பயன்படுத்த விரும்பும் மீடியா வகையை எளிமையாக தேர்வு செய்து கொள்ளலாம்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours