மே மாதத்தின் 2வது வாரமான மே 6ம் தேதி முதல் மே 10ம் தேதி வரையான காலத்தில் 9 ஐபிஓக்கள் வெளியாக உள்ளன.
அதன்படி, Indegene நிறுவனம் ரூ.1800 கோடி ஐபிஓவை மே 6ம் தேதி தொடங்குகிறது. அதேபோல் ஆதார் ஹவுசிங் ஃபைனான்ஸ், TBO டெக் ஆகியவற்றின் மே 8ம் தேதி ஐபிஓ தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூன்று நிறுவனங்களும் தங்கள் வெளியீடுகள் மூலம் ஒட்டுமொத்தமாக ரூ. 6,000 கோடி நிதி திரட்ட உள்ளது.
இதுமட்டும் இல்லாமல் எஸ் எம் இ சந்தையில் எனர்ஜி-மிஷன் மெஷினரிஸ், TGIF அக்ரிபிசினஸ், சில்க்ஃப்ளெக்ஸ் பாலிமர்ஸ், ஃபைன்லிஸ்டிங் டெக்னாலஜிஸ், வின்சோல் இன்ஜினியர்ஸ் மற்றும் ரிஃப்ராக்டரி ஷேப்ஸ் ஆகியவை அடங்கும் என்றும் தெரிவிக்கப்படுள்ளது.
இதுமட்டும் இல்லாமல் 6 எஸ் எம் இ ஐபிஓக்கள் அடுத்த வாரம் சந்தைக்கு வர உள்ளன. இதன் மூலம் எனர்ஜி மிஷன் மெஷினரிகளின் வெளியீடு அளவு அடிப்படையில் மிகப்பெரியது. எனர்ஜி மிஷனின் ரூ.41 கோடியாகும். மே 9ம் தேதி தொடங்கி மே 13ம் தேதி நிறைவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், டிபிஓ டெக் நிறுவனம் ஐபிஓ வெளியிட உள்ளதாகவும், அதன் பங்கின் விலை ரூ. 875-920 இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மே 8ம் தேதி தொடங்கும் இந்த ஐபிஓ மே 10ம் தேதி முடிவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் ஐபிஓ மூலமாக ரூ.1551 கோடியை திரட்ட திட்டமிட்டுள்ளது.
+ There are no comments
Add yours