ஏர்டெல், இந்தியாவின் முன்னணி தொலைத் தொடர்பு நிறுவனங்களில் ஒன்றாக இருந்து வருகிறது. பயனர்களின் வசதிக்கு ஏற்ப திட்டங்களை வழங்கி வருகிறது. அந்த வகையில் ஏர்டெல், ஜியோவுக்குப் போட்டியாக ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தில் நெட்பிளிக்ஸ் இலவச சந்தா வழங்குகிறது.
ரூ.1,499 திட்டத்தில் அன்லிமிடெட் காலிங், மெசேஜ் சலுகைகளுடன் இதுவும் வழங்கப்படுகிறது. ரூ.1,499 திட்டம் ஏர்டெல்லின் ரூ.1,499 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தில் மாதம் ரூ.199 மதிப்பிலான நெட்பிளிக்ஸ் பேஸிக் சந்தா உடன் வருகிறது.
இது பயனர்களை 720p வரையிலான தெளிவுத்திறனில் (resolution) வீடியோக்களை ஸ்ட்ரீம் செய்கிறது. மேலும, இந்த ரூ.1499 திட்டத்தில் தினசரி 3ஜிபி டேட்டா, அன்லிமிடெட் காலிங் வசதி மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்.எம்.எஸ் வழங்கப்படுகிறது. இந்தத் திட்டம் 84 நாட்கள் வேலிடிட்டி கொண்டது.
இது தவிர, வாடிக்கையாளர்கள் அன்லிமிடெட் 5ஜி டேட்டா, அப்பல்லோ 24|7 சர்க்கிள், இலவச ஹெலோட்யூன்ஸ் மற்றும் விங்க் மியூசிக் ஆகியவற்றைப் பெறுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
+ There are no comments
Add yours