பெண்களுக்கு ரூ.3 லட்சம் வட்டியில்லா கடன் தெரியுமா?

Spread the love

உத்யோகினி ( Udyogini ) என்ற பெயரில் மத்திய அரசு பெண்களுக்கான ஒரு சிறப்பு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் மூலம் குறிப்பிட்ட தொழில் செய்யும் பெண்களுக்கு ரூ.3 லட்சம் வரை கடன் உதவி வழங்கப்படுகிறது.

சமையல் எண்ணெய் வர்த்தகம் செய்ய மத்திய அரசு பெண்களுக்கு ரூ.1 லட்சம் முதல் ரூ.3 லட்சம் வரை கடன் உதவி வழங்குகிறது. இதில் பிற்படுத்தப்பட்ட பிரிவினை சேர்ந்த பெண்களுக்கு 50% மானியம் வழங்கப்படுகிறது. அதாவது ரூ.3 லட்சம் கடன் வாங்கினால் ரூ.1.50 மட்டும் திருப்பி செலுத்தினால் போதும்.

இதேபோன்று கடன் பெறும் பெண் சிறப்பு பிரிவினராகவோ அல்லது பொது பிரிவினராகவோ இருந்தால் ரூ.3 லட்சம் கடனில் அதிகபட்சமாக ரூ.90 வரை மானியம் வழங்கப்படும். கடன் பெற்றவர்கள் ரூ.2.1 லட்சத்தை திருப்பி செலுத்தினால் போதும்.

இந்த திட்டத்தில் கிராமத்து பெண்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது. எனவே கிராமத்தில் வசிக்கும் பெண்களுக்கு இந்த திட்டத்தில் கடன் பெற அதிக வாய்ப்புள்ளது. அதுமட்டுமன்றி இந்த திட்டத்தின் மூலம் விவசாயம் செய்யும் பெண்களுக்கு வட்டியில்லா கடனும் வழங்கப்படுகிறது.

இந்த திட்டம் வணிக மற்றும் பொதுத்துறை வங்கிகளால் செயல்படுத்தப்படுகிறது. பெண்கள் வங்கிகளில் வட்டியில்லா கடன் பெறுவது மட்டுமன்றி, இந்த திட்டத்தின் மூலம் சிறப்பு தொழில் மேம்பாட்டு பயிற்சியும் பெறுகின்றனர்.

இந்த திட்டத்தின் மூலம் ரூ.3 லட்சம் கடன் பெற உத்தரவாத ஆவணங்கள் எதுவும் தேவையில்லை. இதற்கு கட்டணமும் வசூலிக்கப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours