தங்கம் விலை அதிரடி குறைவு; காரணம் என்ன?

Spread the love

மே மாத தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடன் விற்பனை செய்யப்படுகிறது. நேற்று மே 2 ஆம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.640 உயர்ந்த நிலையில் இன்று விலை குறைந்துள்ளது.

அதன்படி இன்று மே 3 ஆம் தேதி 22 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.100 குறைந்து ஒரு கிராம் ரூ.6,615-க்கும், சவரனுக்கு ரூ.800 குறைந்து ஒரு சவரன் ரூ.52,920-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதே போன்று 18 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.82 குறைந்து ஒரு கிராம் ரூ.5,419-க்கும், சவரனுக்கு ரூ.656 குறைந்து ஒரு சவரன் ரூ.43,352-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.87-க்கும் ஒரு கிலோ வெள்ளி 87,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours