தங்கம் விலை நாளுக்கு நாள் உயர்வதும், மறுநாள் குறைவதுமாக ஆட்டம் காட்டி வருகிறது. இதற்கிடையில், இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையே நிலவிய போர் காரணமாக உச்சத்தை எட்டியது. அவ்வப்போது சற்று சரிந்து வந்த தங்கம் விலை இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து தொடர்ந்து அதிகரித்த வண்ணமே இருந்தது.
இந்நிலையில், கடந்த சனிக்கிழமை தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 80 குறைந்து ஒரு சவரன் ரூ. 49,120-க்கும், கிராமுக்கு ரூ. 10 குறைந்து ஒரு கிராம் ரூ. 6,140-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில், சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 160 அதிகரித்து ஒரு சவரன் ரூ. 49,640-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ. 20 அதிகரித்து ஒரு கிராம் தங்கம் ரூ. 6,205-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
வெள்ளி விலை கிராமுக்கு 30 காசுகள் அதிகரித்து ஒரு கிராம் வெள்ளி ரூ.80.80-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.80,800-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
+ There are no comments
Add yours