கல்யாண் ஜூவல்லர்ஸ் வெள்ளிக்கிழமையன்று மார்ச் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் ஒருங்கிணைந்த வருவாயில் 34 சதவீதம் அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது.
மேலும், 2023-24 நிதியாண்டில் 31 சதவீத வளர்ச்சியைப் பதிவுசெய்துள்ளது. நான்காவது காலாண்டு மற்றும் முழு FY24க்கான உண்மையான வருவாய் புள்ளிவிவரங்களை நிறுவனம் வழங்கவில்லை.
இந்தியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் 253 ஷோரூம்களைக் கொண்ட கொச்சியை தளமாகக் கொண்ட கல்யாண் ஜூவல்லர்ஸ், கடந்த நிதியாண்டின் நான்காம் காலாண்டில் கிட்டத்தட்ட ரூ.3,400 கோடி வருவாயையும், 2022-23ஆம் ஆண்டு முழுவதும் ரூ.14,109.33 கோடியையும் ஈட்டியுள்ளது.
“சமீபத்தில் முடிவடைந்த காலாண்டு மிகவும் ஊக்கமளிக்கும் ஒன்றாக உள்ளது, காலாண்டின் இரண்டாம் பாதியில் தங்கத்தின் விலையில் கூர்மையான உயர்வு இருந்தபோதிலும், இந்தியா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள எங்களின் அனைத்து சந்தைகளிலும் கால்பதிப்பு மற்றும் வருவாய் ஆகிய இரண்டிலும் தொடர்ச்சியான வலுவான வேகத்தை கண்டுள்ளது” என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.
முந்தைய ஆண்டைக் காட்டிலும், FY24-ன் நான்காம் காலாண்டில் இந்தியாவின் செயல்பாடுகளுக்கு சுமார் 38 சதவிகித வருவாய் வளர்ச்சியைக் கண்டதாக கல்யாண் ஜூவல்லர்ஸ் கூறியது என்பது குறிப்பிடத்தக்கது.
+ There are no comments
Add yours