நாட்டின் மிகப்பெரிய வங்கிகளில் ஒன்றான பாரத ஸ்டேட் வங்கி, சமீபத்தில் FD-களுக்கான வட்டி விகிதங்களை உயர்த்தியுள்ளது. ரூ.2 கோடி வரையிலான FD-க்களுக்கு இது பொருந்தும். வட்டி விகிதங்களின் உயர்வு குறிப்பிட்ட FD-க்களுக்கு மட்டுமே பொருந்தும்.
SBI-ன் இந்த புதிய FD கட்டண உயர்வு நேற்று (15.05.2024) முதல் அமலுக்கு வந்தது. சமீபத்தில் வட்டி விகிதங்களை 25-75 அடிப்படை புள்ளிகள் 46 நாட்களில் இருந்து 179 நாட்களுக்கும், 180 நாட்களில் இருந்து 210 நாட்களுக்கும், 211 நாட்களில் இருந்து ஒரு வருடத்திற்கும் குறைவாக அதிகரித்துள்ளது.
எஸ்பிஐ கடைசியாக கடந்த டிசம்பர் மாதம் 27 ஆம் தேதி FD-களுக்கான வட்டி விகிதங்களை உயர்த்தியது. இது நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
அதன்படி 7 நாட்கள் முதல் 45 நாட்கள் வரையிலான FD-க்களுக்கு 3.50% வட்டி கிடைக்கும். 46 நாட்கள் முதல் 179 நாட்கள் வரையிலான FD-க்களுக்கு 5.50% வட்டி கிடைக்கும். இதேபோல 180 நாட்கள் முதல் 210 நாட்கள் வரையிலான FD-க்களுக்கு 6% வட்டி கிடைக்கும்.
211 நாட்கள் முதல் 1 வருடத்திற்கும் குறைவாக FD-க்களுக்கு 6.25% வட்டி கிடைக்கும். 1 முதல் 2 ஆண்டுகளுக்கும் குறைவான FD-க்களுக்கு 6.80% வட்டி கிடைக்கும். மேலும் 2 முதல் 3 ஆண்டுகளுக்கும் குறைவான FD-க்களுக்கு 7% வட்டி கிடைக்கும்.
3 ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகள் வரையிலான FD-க்களுக்கு 6.75% வட்டி கிடைக்கும். 5 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான FD-க்களுக்கு 6.50% வட்டி கிடைக்கும்.
எஸ்பிஐ வங்கியில் மூத்த குடிமககளுக்கான FD-களுக்கு கூடுதலாக 50 அடிப்படை புள்ளிகள் வழங்கப்படுகின்றன. சமீபத்திய உயர்வுக்கு பிறகு 7 முதல் 10 ஆண்டுகளுக்கான FD-களுக்கு 4 முதல் 7.5% வரையிலான வட்டி வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
+ There are no comments
Add yours