ஜூன் மாதம் முதல்நாளான இன்று சமையல் எரிவாயு சிலிண்டர் விலை சற்று குறைந்துள்ளது. தற்போது புதிய விலைப்பட்டியல் வெளியாகியுள்ளது.
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப, சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன.
அதன்படி, சென்னையில் வர்த்தக பயன்பாட்டுக்கான 19 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 70.50 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது.
அதனால் ஒரு சிலிண்டர் 1,840.50 ரூபாய்க்கு விற்கப்படும் என பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளது.
அதேபோல, டெல்லியில் ரூ. 69.5 , கொல்கத்தாவில் ரூ. 72 மற்றும் மும்பையில் ரூ. 69.5 என சிலிண்டர் விலை குறைக்கப்பட்டுள்ளது.
ஆனால் வீட்டு பயன்பாட்டு சிலிண்டர் விலையில் எந்தவித மாற்றமும் இல்லாமல் ஒரு சிலிண்டர் ரூ.818.50க்கு விற்பனை செய்யப்படுகிறது.
+ There are no comments
Add yours