ஜூன் மாதத்தில், டீசலின் தேவை 4 சதவீதம் சரிந்துள்ளதாக அரசுக்கு சொந்தமான நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. கடுமையான வெப்பம் காரணமாக, பயணங்கள் குறைந்ததே இதற்கு காரணம் ஆகும்
எரிபொருள் விற்பனை இந்த ஆண்டு மாதந்தோறும் தொடர்ந்து குறைந்து வருவதன் மூலம் வீழ்ச்சியடைந்துள்ளது. மேலும், பொதுத்தேர்தல் முடிந்த பிறகும் இந்த சரிவு நிலை நீடித்து வருகிறது.
90% சந்தையை கட்டுப்படுத்தும் அரசுக்கு சொந்தமான மூன்று நிறுவனங்களின் பெட்ரோல் விற்பனையானது, ஜூன் மாதத்தின் முதல் பாதியில் 1.42 மில்லியன் டன்களாக இருந்தது, இது கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் பயன்படுத்தப்பட்ட 1.41 மில்லியன் டன்னைப் போலவே இருந்தது. இருப்பினும், முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 4.6 சதவீதம் குறைந்துள்ளது.
மார்ச் மாதத்தில் 2.7 சதவீதமும், ஏப்ரல் மாதத்தில் 2.3 சதவீதமும் மற்றும் மே மாதத்தில் 1.1 சதவீதம் சரிந்தது. இதைத்தொடர்ந்து ஜூன் 1 முதல் 15 வரையிலான காலக்கட்டத்தில் டீசல் விற்பனை 3.9 சதவீதம் குறைந்து 3.95 மில்லியன் டன்னாக முந்தைய ஆண்டைவிட குறிப்பிடத்தக்க சரிவை சந்தித்துள்ளது.
தேர்தல் பிரசாரம், கோடை அறுவடை காலம் மற்றும் கார்களில் ஏ.சி.யின் பயன்பாடு உள்ளிட்ட பல்வேறு காரணங்களினால் பெட்ரோல், டீசல் விற்பனை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், வழக்கத்திற்கு மாறாக இந்த ஆண்டு சரிவை சந்தித்துள்ளது.
இரண்டு வருட இடைவேளைக்கு பிறகு, மார்ச் மாத நடுப்பகுதியில், பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் லிட்டருக்கு ரூ.2 குறைக்கப்பட்டன, இருப்பினும் வழக்கத்திற்கு மாறாக சரிவை சந்தித்துள்ளது.
மே 1 முதல் 15 வரையிலான காலக்கட்டத்தில் ஒப்பிடும்போது மாதந்தோறும் பெட்ரோல் விற்பனை 3.6 சதவீதம் குறைந்து 1.47 மில்லியன் டன்னாக இருந்தது. அதே நேரத்தில் மே மாதத்தின் முதல் பாதியில் டீசல் தேவை 3.54 மில்லியன் டன்களாக சீராக இருந்தது.
ஜூன் 1 முதல் 15 வரையிலான காலக்கட்டத்தில், பெட்ரோல் விற்பனை ஜூன் 2022 இல் இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது 4.6 சதவீதம் சரிவை சந்தித்துள்ளது, ஆனால் 2020 இன் கோவிட்-பாதிக்கப்பட்ட காலத்துடன் ஒப்பிடும்போது 28.1 சதவீதம் குறிப்பிடத்தக்க அதிகரிப்பைக் காட்டியது.
ஜூன் 1 முதல் 15 வரையிலான காலக்கட்டத்தில், டீசல் விற்பனை ஜூன் 2022இல் இதே காலக்கட்டத்துடன் ஒப்பிடும்போது 10.5 சதவீதம் சரிவை சந்தித்துள்ளது. ஆனால் 2020இல் இதே காலக்கட்டத்துடன் ஒப்பிடும்போது 14 சதவீதம் குறிப்பிடத்தக்க அதிகரிப்பைக் காட்டியது.
பெட்ரோல் மற்றும் டீசலைப் போலவே, ATF தேவையும் இப்போது கோவிட்க்கு முந்தைய அளவை விட அதிகமாக உள்ளது. ஜூன் 1 முதல் 15, 2024 வரையிலான காலக்கட்டத்தில் ATF விற்பனை 2022ஐ விட 10.1 சதவீதம் அதிகமாக இருந்தது மற்றும் ஜூன் 1 முதல் 15, 2020 உடன் ஒப்பிடும்போது 6.1 சதவீதம் அதிகரித்துள்ளது.
ஜூன் 1-15, 2024இல் சமையல் எரிவாயு எல்பிஜி விற்பனை ஆண்டுக்கு ஆண்டு 0.1 சதவீதம் அதிகரித்து 1.24 மில்லியன் டன்னாக இருந்தது.இருப்பினும், ஜூன் 1-15, 2022 உடன் ஒப்பிடும்போது எல்பிஜி நுகர்வு 0.9 சதவீதம் குறைந்துள்ளது, அதே நேரத்தில் 2020ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியில் கணிசமாக 32 சதவீதம் அதிகரித்துள்ளது.
+ There are no comments
Add yours