இந்தியப் பங்குச் சந்தைகள் இன்று உயர்வுடன் வர்த்தகத்தை நிறைவு செய்தன.
தேசிய பங்குச் சந்தை (NSE) நிஃப்டி 50 135.10 புள்ளிகள் அல்லது 0.61% அதிகரித்து 22,462.00 ஆகவும், மும்பை பங்குச் சந்தை (BSE) சென்செக்ஸ் 363.20 புள்ளிகள் அல்லது 0.49% உயர்ந்து 74,014.55 ஆகவும் காணப்பட்டது.
பங்குகளை பொறுத்தமட்டில், ஜே.எஸ்.டபிள்யூ (JSW) ஸ்டீக், டாடா ஸ்டீல், டிவிஸ் லேப், ஸ்ரீராம் டிரான்ஸ்போர்ட் ஃபைனான்ஸ், அதானி போர்ட்ஸ் மற்றும் எஸ்.இ.இசட் (SEZ) ஆகியவை தேசிய பங்குச் சந்தையில் அதிக லாபம் ஈட்டின.
மறுபுறம், ஐஷர் மோட்டார்ஸ், டைட்டன் கம்பெனி, பஜாஜ் ஆட்டோ, எல்டிஐ மைண்ட்ட்ரீ, நெஸ்லே இந்தியா ஆகியவை பின்தங்கின. மீடியா மற்றும் ரியாலிட்டி பங்குகள் மற்ற துறை குறியீடுகளை விட சிறப்பாக செயல்பட்டன. அதே நேரத்தில் எஃப்எம்சிஜி மற்றும் ஆட்டோ பங்குகள் வீழ்ச்சியடைந்தன.
லார்ஜ்-கேப் மற்றும் மிட்-கேப் பங்குகளின் லாபத்துடன், பரந்த குறியீடுகள் உயர்வில் முடிந்தன. வங்கி நிஃப்டி குறியீடு 453.65 புள்ளிகள் அல்லது 0.96% உயர்ந்து 47,578.25-ல் முடிந்தது.
+ There are no comments
Add yours