பொது தரிசனம் இல்லை…அரங்கநாதசுவாமி கோயில் நிர்வாகம் !

Spread the love

பிரதமர் மோடி, ஸ்ரீரங்கம் அரங்கநாத கோயிலுக்கு சாமி தரிசனம் செய்ய வருவதை தரவுள்ளதை முன்னிட்டு, நாளை பிற்பகல் வரை பொதுமக்கள் கோயிலுக்கு செல்ல தடை விதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

அந்த வகையில், பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஜன.19) சென்னையில் நடைபெறும் ‘கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகளை துவக்கி வைக்கவுள்ளார். அதன்பின்னர், நாளை (ஜன.20) காலை அயோத்தி ராமரின் குல தெய்வமாகக் கருதப்படும் திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயிலில் சுவாமி தரிசனம் மேற்கொள்ள உள்ளார்.

இந்த நிலையில், பிரதமர் மோடி திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலுக்கு சாமி தரிசனம் மேற்கொள்ள உள்ளதை முன்னிட்டு பாதுகாப்பு முன்னேற்பாடுகளை மாவட்ட மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக, ஸ்ரீரங்கம் ராஜ கோபுரத்தில் இருந்து ஆலயத்தின் சுற்றியுள்ள அனைத்து தெருக்களில் வசிக்கும் மக்கள் அனைவரிடமும் அவரவர்களின் விவரங்களை சேகரித்துள்ளனர்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours