தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று மூன்றாவது நாளாக நடைபெற்று வருகிறது. அப்போது கேள்வி, பதில் நேரத்தில், எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை விவகாரம் தொடர்பாக எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார். துணைத் தலைவர் இருக்கை விவகாரத்தில் மரபை மாற்ற வேண்டாம்.
எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கை விவகாரம் தொடர்பாக, 10 முறை கடிதம் அளித்துள்ளோம். 3 சட்டமன்ற உறுப்பினர்களை நீக்க சொன்னதையும் நீங்கள் செய்யவில்லை. அதாவது, ஓபிஎஸ் உள்ளிட்ட 3 எம்எல்ஏக்களை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தார்.
இதற்கு சபாநாயகர் அப்பாவு, திர்க்கட்சி துணைத் தலைவர் விவகாரம் தொடர்பாக, சட்டம் விதி என்ன சொல்கிறதோ அதன் படி தான் நடக்கிறேன். நீங்கள் கொடுத்ததை மறுக்கவில்லை, இருக்கை விவகாரம் தொடர்பாக வீம்புக்காக நடக்கவில்லை, சட்டப்படி தான் நடக்கிறேன்.
எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கை விவகாரம் தொடர்பாக, பேரவையில் அதிமுக உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இந்த விவகாரம் குறித்து ஓபிஎஸ் அவர்கள் கூறுகையில், உட்கட்சி பிரச்னையை இங்கு பேசியது வருந்தத்தக்கது; வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது; நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட தீர்ப்பு தற்காலிகமானதுதான் என தெரிவித்துள்ளார்.
+ There are no comments
Add yours