கடந்த சில நாட்களுக்கு முன்பு நடிகர் மன்சூர் அலிகான் நடிகை த்ரிஷா பற்றி பேசிய விஷயம் பெரிய அளவில் சர்ச்சையான நிலையில், நடிகை திரிஷா தரப்பு விளக்கத்தை கேட்டு ஆயிரம் விளக்கு மகளிர் காவல் துறையினர் கடிதம் அனுப்பியுள்ளனர்.
லியோ படத்தில் த்ரிஷாவுடன் நடித்தது குறித்து மன்சூர் அலிகான் அவதூறாக பேசியது சர்ச்சையானதால் அவர் மீது 2 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து, நடிகை த்ரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய விவகாரத்தில். தான் ஜாலியாகவே பேசியதாகவும், மனவருத்தம் அடைவதாகவும் மன்சூர் அலிகான் கூறியிருந்தார்.
ஆனால், நடிகர் மன்சூர் அலிகான் த்ரிஷா பற்றி பேசிய விவகாரம் பெரிய அளவில் சர்ச்சையாக வெடித்த நிலையில், இந்த விவகாரம் குறித்து தமிழ் பிரபலங்கள் முதல் தெலுங்கு பிரபலங்கள் வரை பலரும் தங்களுடைய கண்டனங்களை தெரிவித்தனர்.
பின்னர், மன்சூர் அலிகான் தயக்கம் காட்டி மன்னிப்பு கேட்க மறுத்திருந்தாலும், (நவம்பர் 24ம் தேதி) த்ரிஷா தன்னை மன்னித்து விட வேண்டும் எனவும் கேட்டிருந்தார். இதனை ஏற்றுக்கொண்ட த்ரிஷா, தனது X தள பக்கத்தில், “தவறு செய்வது மனித இயல்பு, அதை மன்னிப்பதே தெய்வ பண்பு” என்று குறிப்பிட்டுஇருந்தார்.
இந்த நிலையில், நடிகை த்ரிஷா குறித்து நடிகர் மன்சூர் அலிகான் சர்ச்சை வகையில் பேசிய விவகாரம் தொடர்பாக, த்ரிஷா தரப்பிடம் விளக்கம் கேட்டு ஆயிரம் விளக்கு மகளிர் காவல்துறை கடிதம் அனுப்பியுள்ளது. அதாவது எழுத் துப்பூர்வமாக விளக்கம் அளிக்க த்ரிஷாவிற்கு காவல்துறை அறிவுரை கூறிஉள்ளது.
இந்த சர்ச்சை விவகாரத்தில் மன்சூர் அலிகான் மன்னிப்பு கேட்க, த்ரிஷாவும் மன்னிப்பை ஏற்றுக்கொண்டார் என்றும், பிரச்சனை இதோட முடிந்தது என்று பார்த்தால் ஓயாது போல் தெரிகிறது. சரி என்ன நடக்க போகிறது என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.
நடிகர் மன்சூர் அலிகான் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு பேட்டியில் “ஆரம்ப காலகட்டத்தில் படங்களில் நடிக்க கூப்பிட்டால் கதாநாயகியை ரேப் செய்வது போல காட்சிகள் இருக்கும். அதைப்போலவே, லியோ படத்தில் லோகேஷ் அழைத்தவுடன் நடிகை திரிஷா என்றவுடன் அதுபோல காட்சி இருக்கும் என நினைத்தேன் ஆனால் அப்படி இல்லை” என பேசியிருந்தார்.
+ There are no comments
Add yours