அனிமல் படம்…. ரூ.600 கோடி வசூல் சாதனை.!

Spread the love

இயக்குனர் சந்தீப் ரெட்டி இயக்கிய இந்த படத்தை டி-சீரிஸ் பிலிம்ஸ், பத்ரகாளி பிக்சர்ஸ் மற்றும் சினி1 ஸ்டுடியோஸ் ஆகியவற்றின் கீழ் பூஷன் குமார், கிரிஷன் குமார், முராத் கெடானி மற்றும் பிரனய் ரெட்டி வங்கா ஆகியோர் தயாரித்துள்ளனர். மேலும் இப்படத்தில் ரன்பீர் கபூர், அனில் கபூர், ராஷ்மிகா மந்தனா, ட்ரிப்டி டிம்ரி மற்றும் பாபி தியோல் ஆகியோர் நடித்துள்ளனர்.

மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த டிசம்பர் 1 ஆம் தேதி வெளியாகி உலக பாக்ஸ் ஆபிஸில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகிறது. அதன்படி, தற்பொழுது இந்த திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.600 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இதன் மூலம், இந்தாண்டு 600 கோடி வசூல் செய்த பதான், கதர் 2, ஜவான், ஜெயிலர், லியோ ஆகிய படங்கள் வரிசையில் அனிமலும் இணைந்துள்ளது.

முதல் நாளில் இருந்தே இந்த அதிரடியான ஆக்ஷன், அசத்தலான காதல் காட்சிகளால் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படம் இந்தியாவில் மட்டும் சுமார் 362 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

ஷாருக்கானின் ‘டுங்கி’ திரைப்படம் டிசம்பர் 21ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் வரை டிக்கெட் கவுன்டர்களில் ‘அனிமல்’ தொடர்ந்து ஆதிக்கம் செலுத்துவது போல் தெரிகிறது. இப்படம் உலகளவில் வெளியான நாளில் இருந்து நேற்று வரை எத்தனை கோடி வசூல் செய்துள்ளது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

பாக்ஸ் ஆபிஸ்:

உலகம் முழுவதும் அனிமல் திரைப்படம் முதல் நாளில் ரூ.116 கோடிக்கு மேல் வசூல் செய்து இருந்தது.

இரண்டாம் நாளில் ரூ.120 கோடி

மூன்றாம் நாளில் ரூ.120 கோடி

நான்காம் நாளில் ரூ.69 கோடி

ஐந்தாம் நாளில் ரூ.56 கோடி

ஆறாம் நாளில் ரூ.46.60 கோடி

ஏழாம்நாளில் ரூ.35.7 கோடி

எட்டாம் நாளான நேற்று ரூ.37.67 கோடி என வசூல் செய்து மொத்தம் 600.67 கோடி ரூபாய் வசூல் செய்து மிகப்பெரிய சாதனையை படைத்து ரன்பீர் கபூருக்கு அனிமல் திரைப்படம் பாலிவுட்டில் புதிய கேரியரை உருவாக்கியுள்ளது. விரைவில் இந்த திரைப்படம் 1000 கோடி கிளப்பில் இணையுமா என்கிற எதிர்பார்ப்பு அனைவரது பார்வையில் உள்ளது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours