வெற்றிக்காக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ராமேஸ்வரம் இராமநாதசுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் மேற்கொண்டுள்ளார்.
‘லியோ’ திரைப்படம் நாளை மறுநாள் வெளியாகவுள்ள நிலையில், படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ராமேஸ்வரத்தில் சுவாமி தரிசனம் மேற்கொண்டுள்ளார்.
முன்னதாக அக்னி தீர்த்த கடற்கரையில் புனித நீராடி விட்டு கோயிலுக்கு உள்ளே உள்ள 22 புண்ணிய தீர்த்தங்களில் நீராடினார்.
பின்னர் திருக்கோயிலுக்கு உள்ளே சென்று இராமநாதசுவாமி மற்றும் பர்வதவர்த்தினி அம்மாளிடம் தரிசனம் பெற்று சென்றார்.
இதையடுத்து இயக்குநர் லோகேஷ் கனகராஜுடன் புகைப்படம், செல்ஃபி எடுக்க பக்தர்கள் முண்டியடித்ததால் கோயிலுக்குள் பணியாற்றிய போலீஸார் அவரை பாதுகாப்பாக வெளிய அழைத்து வந்தனர். இதற்கு முன்பு திருப்பதியில் அவர் சுவாமி தரிசனம் மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
+ There are no comments
Add yours