நடிகர் பிரபாஸ் முக்கிய வேடத்தில் நடித்துள்ள “சலார்” திரைப்படத்தின் முதல் சிங்கிள் இன்று வெளியாகிறது. ரவி பஸ்ரூர் இசையமைத்துள்ள இந்தப் பாடல், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, தமிழ் மற்றும் மலையாளம் ஆகிய ஐந்து மொழிகளில் வெளியாகியுள்ளது.
கேஜிஎப் இரண்டு பாகங்களை இயக்கியதன் மூலம் பிரபலமான இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கும் இந்த படத்தை ஹோம்பலே பிலிம்ஸ் தயாரிக்கிறது. மிக்பெரிய பட்ஜெட்டில் உருவாகியுள்ள இந்த படத்தில் நடிகர்கள் பிருத்விராஜ் சுகுமாரன், ஸ்ருதி ஹாசன், ஸ்ரீயா ரெட்டி, ஜெகபதி பாபு, மது குருசாமி, ராமச்சந்திர ராஜு, கருட ராம் மற்றும் தின்னு ஆனந்த் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இப்படம் ஏ சான்றிதழுடன் தணிக்கை செய்யப்பட்டு டிசம்பர் 22ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. படம் வெளியாக இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், படத்திற்கான ப்ரோமோஷன் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக படத்தின் டிரைலரை கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியாகி இருந்தது.
இந்த நிலையில், படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது. தமிழில் ஆகாச சூரியன், தெலுங்கில் சூரீடே, கன்னடத்தில் ஆகாஷா கதியே, ஹிந்தியில் சூரஜ் ஹி சாவோன் பாங்கே, மலையாளத்தில் சுரயங்கம் என்று 5 மொழிகளில் வெளியாகி ரசிகர்களை வியக்க உள்ளது.
+ There are no comments
Add yours