நடிகர் விஜய் மகன் ஜேசன் விஜய் இயக்கவுள்ள புதிய படத்தில் கதாநாயகனாக நடிக்க இருப்பவர் குறித்த தகவல் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.
நடிகர் விஜய் மகன் ஜேசன் விஜய் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் இயக்குநராக அறிமுகமாகிறார் என இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. லண்டனில் திரைத்துறை தொடர்பான படிப்பை முடித்துள்ள ஜேசன் இதற்கு முன்பு ‘டிரிக்கர்’ எனும் குறும்படத்தை இயக்கி உள்ளார். நடிப்பதற்கு இவருக்கு முன்பே பல இயக்குநர்களிடம் இருந்து வாய்ப்பு வந்த போதும் அதைத் தவிர்த்து இயக்குநராகி உள்ளார்.
ஜேசன் விஜய் இயக்கும் படத்திற்கான பூஜையும் சமீபத்தில் முடிவடைந்துள்ள நிலையில், இதில் விஜய் கலந்து கொள்ளவில்லை என்ற தகவலும் வெளியாகியுள்ளது. மேலும், ஜேசனுக்கான இந்தப் படவாய்ப்பை அவரது அம்மா சங்கீதாதான் லைகா நிறுவனத்திடம் பேசி வாங்கித் தந்துள்ளார் எனவும் சொல்லப்படுகிறது. ஜேசன் இயக்கும் படத்தில் யார் நடிப்பார்கள் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் நிலவி வந்தது. இந்த நிலையில் அதுகுறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
ஜேசன் இயக்கும் படத்தில் பிக் பாஸ் தமிழின் மூன்றாவது சீசனில் கலந்து கொண்டவரும், நடிகருமான கவின் ஹீரோவாக நடிக்கிறார் என்ற தகவல் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. இந்தப் படத்தில் நடிகர் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதுகுறித்தான அதிகாரப்பூர்வ தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்
+ There are no comments
Add yours