மோகன்லால் நடிப்பில் லிஜோ ஜோஸ் பெல்லிசேரி இயக்கத்தில் உருவாகி வரும் Malaikottai valiban படம் உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் இன்று கோலாகலமாக வெளியாகி உள்ளது .
கேரள சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் மோகன்லாலின் அதிரடியான நடிப்பில் லிஜோ ஜோஸ் பெல்லிசேரி இயக்கத்தில் விறுவிறுப்பாக உருவாகி வரும் படம் ‘மலைக்கோட்டை வாலிபன்’ .
மலையாளத் திரையுலகில் ‘ஜல்லிக்கட்டு’, ‘அங்கமாலி டைரிஸ்’, ‘சுருளி’, ‘நண்பகல் நேரத்து மயக்கம்’ போன்ற படங்கள் மூலம் ரசிகர்களின் கவனம் ஈர்த்தவர் தான் இயக்குநர் லிஜோ ஜோஸ் பெல்லிசேரி .
இவரது இயக்கத்தில் உருவாகி உள்ள இப்படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் தாறுமாறான எதிர்பார்ப்பு நிலவி வந்தது .
மோகன்லாலுடன் இப்படத்தில் மணிகண்டன் ஆர். ஆச்சாரி, சோனாலி குல்கர்னி மற்றும் ஹரீஷ் பேரடி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர் .
பிரசாந்த் பிள்ளை இசையமைத்துள்ள இப்படத்தை ஆர்.பி.சவுத்ரியின் சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து உள்ளது.
இந்நிலையில் இப்படம் இன்று மலையாளம் மற்றும் தமிழ் என இருமொழிகளில் பிரம்மாண்டமாக வெளியாகி உள்ளது.
வரலாற்றுப் படமான இதில் மோகன்லால், மலைக்கோட்டை வாலிபனாக நடித்துள்ளார். ரங்கப்பட்டினம் ரங்கராணி என்ற முக்கியமான கதாபாத்திரத்தில் சோனாலி குல்கர்னி நடித்திருக்கிறார்.
வலிமை மற்றும் திறமை மிக்க போர்வீரன் மோகன்லாலை சுற்றியே கதை நகர்கிறது.ரங்கப்பட்டினம் ரங்கராணி என்ற பிரபலமான நடனக் கலைஞரைக் கண்டதும் வாலிபனின் வாழ்க்கையில் ஓர் திருப்பம் ஏற்படுகிறது.
இதனால், ஏற்படும் விளைவுகளையும், சவால்களையும் போர் வீரன் மோகன் லால் எப்படி எதிர் கொள்கிறார் என்பதுதான் இந்த படத்தின் கதை.
இதேபோல் இன்று Malaikottai valiban படத்துடன் சேர்ந்து 3 படங்கள் வெளியாகி உள்ளது. சிங்கப்பூர் சலூன் அசோக் செல்வனின் ப்ளூ ஸ்டார் திரைப்படம் , தூக்குதுரை உள்ளிட்ட படங்கள் இன்று வெளியாகி உள்ளது.
இந்த நான்கு திரைப்படங்களில் ப்ளூ ஸ்டார் மற்றும் சிங்கப்பூர் சலூன் , மலைக்கோட்டை வாலிபன் திரைப்படங்கள் தற்போது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருவதாக முதற் கட்ட தகவல் வெளியாகி உள்ளது.
+ There are no comments
Add yours