விஜயகாந்துக்கு பத்மபூஷன் விருது வழங்கும் தேதி அறிவிப்பு!

Spread the love

மறைந்த நடிகரும், தேமுதிக நிறுவனருமான விஜயகாந்துக்கு, வரும் மே ஒன்பதாம் தேதி பத்மபூஷன் விருது வழங்கப்பட உள்ளதாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் கோடைக்கால சிறப்பு தண்ணீர் பந்தலை தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிரேமலதா விஜயகாந்த், “வருகின்ற 9 ஆம் தேதி விஜயகாந்திற்கு பத்மபூஷண் விருது வழங்கப்பட உள்ளது. 3 நாட்களுக்கு முன்பு எனக்கு டெல்லியில் இருந்து அழைப்பு வந்தது. விருது பெற உள்துறை அமைச்சகத்தில் இருந்து அழைப்பு வந்துள்ளது. நானும், விஜயபிரபாகரனும் விருது பெற டெல்லி செல்ல உள்ளோம்.

தமிழக முழுவதும் வெயிலில் தாக்கம் அதிகமாக இருப்பதாலும் அக்னி நட்சத்திரம் மற்றும் தமிழகத்திற்கு ரெட் அலர்ட் கொடுக்கும் அளவிற்கு வெயிலின் தாக்கம் உள்ளது. மக்களின் கஷ்டத்தை போக்கும் வகையில் தேமுதிக சார்பாக தலைமை அலுவலகத்தில் தண்ணீர் பந்தலை திறந்து வைத்துள்ளோம். அதேபோல தமிழகம் முழுவதும் தண்ணீர் பந்தல் திறந்து வைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பள்ளி திறப்பை தள்ளி வைக்கலாம்

விஜயபிரபாகர் விருதுநகர் தொகுதியில் ஒரு மாதம் தங்கியிருந்து எல்லா கிராமங்களுக்கு நேரடியாக சென்ற வேட்பாளர். எல்லா ஊர்களுக்கும் சென்று மக்களை சந்தித்து பிரசாரம் செய்தார்.கேப்டனுடைய மகன் இங்கே போட்டியிடுகிறார். இந்த மண்ணின் மைந்தர் அவருக்கு கண்டிப்பாக வெற்றி வாய்ப்பை தருவோம் என்று பெண்கள், இளைஞர்கள், புது வாக்காளர்கள் அனைவரும் விஜயபிரபாகரனுக்கு வாக்களித்ததாக கூறுகின்றனர். நீலகிரி ஸ்ட்ராங் ரூமில் 4 மணி நேரம் சிசிடிவி கேமரா வேலை செய்யவில்லை என்பது கண்டிக்கத்தக்கது. தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அவர் தெரிவித்தார்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours