சென்னை: விஜய்குமார் நடித்துள்ள ‘ஃபைட் கிளப்’ படத்தின் டீசர் வெளியிடப்பட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. ட்ரெய்லர் எப்படி? – “நான் பொறக்குறதுக்கு முன்னாடி பொறந்த சண்ட இது. யார் செத்தாலும் இந்த சண்ட சாவாது” என்ற விஜய்குமாரின் குரலில் டீசர் தொடங்குகிறது. சேஸிங், சண்டை என விறுவிறுப்பாக நகரும் டீசரில் கோவிந்த் வசந்தாவின் அட்டகாசமான பின்னணி இசை ஈர்க்கிறது. அதற்கு தகுந்த கிருபாகரனின் கட்ஸ் பக்காவாக பொருந்தி மொத்த டீசரையும் ரசிக்க வைக்கிறது.
பிஜிஎம் ஏறி, ஓரிடத்தில் இறங்கி, மீண்டும் ஹைப் ஏறுவது ரசனை. லியோன் பிரிட்டோவின் ப்ரேம்கள் மொத்த படத்துக்குமான ஒரு சோறு பதம். நல்ல மேக்கிங் டீசரில் வெளிப்படுகிறது. முழுக்க சண்டை என்பதால் டைட்டில் பொருத்தம். இளம் தொழில்நுட்ப கலைஞர்கள், நடிகர்களின் இந்த புது முயற்சி கவனிக்க வைக்கிறது. டிசம்பர் 15-ம் தேதி படம் திரையரங்குகளில் வெளியாகிறது.
‘உறியடி’ திரைப்படத்தின் மூலம் புகழ் பெற்ற விஜய் குமார் நடித்துள்ள புதிய படம் ‘ஃபைட் கிளப்’. இந்தப் படத்தை அப்பாஸ் ரஹ்மத் இயக்கியுள்ளார். கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். கார்த்திகேயன் சந்தானம், ஷங்கர் தாஸ் உள்ளிட்ட பலர் படத்தில் நடித்துள்ளனர். ரீல் குட் ஃபிலிம்ஸ் நிறுவனம் மூலம் ஆதித்யா படத்தை தயாரித்துள்ளார். இயக்குநர் லோகேஷ் கனகராஜ் படத்தை வெளியிடுகிறார். டீசர் வீடியோ;
+ There are no comments
Add yours