நடிகர் அஜித்குமாரின் குடும்பம் எங்கேயாவது சுற்றுலா சென்றாலோ அல்லது ஏதேனும் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டலோ அவர்களுடைய புகைப்படங்கள் வைரலாகி ட்ரெண்ட் ஆகிவிடும். அந்த வகையில், தற்பொழுது, நடிகர் அஜித்குமாரின் மகன் ஆத்விக் கால்பந்து போட்டியில் பதக்கம் வென்றுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தற்போது ஆத்விக்கிற்கு 8 வயதாகும் நிலையில், அவரின் க்யூட் புகைப்படங்கள் அடிக்கடி இணையத்தில் வைரலாகும். அந்தவகையில், இப்பொது ஆத்விக் கால்பந்து விளையாடுவது போன்ற புகைப்படங்களை அஜித் ரசிகர்கள் ஆத்விக்கை ‘குட்டி தல’ என்றே அழைத்து வருகின்றனர்.
நடிகர் அஜித்குமார் தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் தனது அடுத்த படமான ‘விடாமுயற்சி’ படத்தின் படப்பிடிப்பிற்காக அஜர்பைஜானில் இருக்கிறார். இதற்கிடையில், அவரது மகன் ஆத்விக் அஜித் கால்பந்து விளையாட்டு போட்டியில் கோல்ட் மெடலை வென்றுள்ளார்.
அஜீத்-ஷாலினியின் மகன் ஆத்விக் தனது சிறு வயதிலிருந்தே கால்பந்து விளையாட்டில் ஆர்வம் காட்டி வருகிறார். இந்நிலையில், அவர் எதிர்காலத்தில் சாம்பியனாக வருவார் என அஜித் ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
விடாமுயற்சி:
லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் அஜித் குமார் நடித்துள்ள ‘விடாமுயற்சி’ படத்தில் அஜித், த்ரிஷா, ரெஜினா கசாண்ட்ரா, சஞ்சய் தத், அர்ஜுன் தாஸ் மற்றும் பலர் நடித்து வருகின்றனர். இதற்கு அனிருத்தின் இசையமைக்க, நீரவ் ஷாவின் ஒளிப்பதிவு செய்து வருகிறார்.
+ There are no comments
Add yours