நடிகர் பிரபுதேவா- இசையமைப்பாளர் ரஹ்மான் இருவரும் பல ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இணைந்துள்ள படத்திற்கு ‘மூன் வாக்’ எனத் தலைப்பிடப்பட்டுள்ளது.
நடிகர் பிரபுதேவா நடிப்பில் வெளியான ’காதலன்’, ‘மின்சாரக் கனவு’ உள்ளிட்டப் பல படங்களுக்கு ரஹ்மான் இசையமைத்துள்ளார். ‘என்னவளே அடி என்னவளே’, ‘பேட்டராப்’, ‘வெண்ணிலவே வெண்ணிலவே’ உள்ளிட்ட பல ஹிட் பாடல்களும் வெளியாகி இருக்கிறது. இந்த ஜோடி 25 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இணைந்திருக்கிறது என்பது ரசிகர்களை உற்சாகப்படுத்தி இருக்கிறது.
இந்தப் படத்தின் தலைப்பு ’மூன் வாக்’ எனத் தலைப்பிடப்பட்டுள்ளது. ரஹ்மான் மற்றும் பிரபுதேவா இருவரையும் போற்றும் வகையிலும், அவர்களுக்குக் கச்சிதமாகப் பொருந்தும் வகையிலும் ‘மூன் வாக்’ என்ற தலைப்பைத் தேர்ந்தெடுத்திருப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது.
மனோஜ் இயக்கத்தில் ஃபேமிலி எண்டர்டெயினராக உருவாகும் இப்படத்தில் நடிகர்கள் பிரபு தேவா, யோகி பாபு, அஜு வர்கீஸ், அர்ஜுன் அசோகன், சாட்ஸ், நிஷ்மா மற்றும் சுஷ்மிதா ஆகியோருடன் மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் பலர் இணைந்து நடிக்கிறார்கள்.
இப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது. இப்படத்தை அடுத்த ஆண்டு 2025ல் பான்-இந்திய படமாகத் திரைக்குக் கொண்டு வர படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.
+ There are no comments
Add yours