பிக் பாஸ் சீசன்8-ல் பங்கேற்கும் சில போட்டியாளர்கள் குறித்தான விவரம் வெளியாகியுள்ளது.
பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசனில் இருந்து நடிகர் கமல்ஹாசன் விலகுவதாக அறிவித்திருந்த நிலையில், கமல்ஹாசனுக்கு பதிலாக நிகழ்ச்சியை நடிகர் விஜய்சேதுபதி தொகுத்து வழங்குகிறார் என்பது கிட்டத்தட்ட உறுதியாகி இருக்கிறது. இது குறித்து சேனல் தரப்பு விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் என எதிர்பார்க்கலாம். தொகுப்பாளர் உறுதியாகி விட்டதால், இன்னொரு பக்கம் போட்டியாளர்கள் தேர்விலும் விறுவிறுப்பைக் கூட்டியிருக்கிறது சேனல் தரப்பு.
இதில் கடந்த சீசனின் வெற்றியாளராக ’ராஜா ராணி’ புகழ் நடிகை அர்ச்சனா தேர்வானார். அவருடைய சிபாரிசில் தான் ‘பாரதி கண்ணம்மா’ புகழ் நடிகர் அருண் போட்டியாளராகத் தேர்வாகி இருக்கிறாராம். அர்ச்சனா- அருண் காதல் கிசுகிசு நீண்ட நாட்களாகவே சின்னத்திரையில் பேசுபொருளாகி இருக்கிறது.
இதனை இருவரும் இன்னும் வெளிப்படையாக உறுதி செய்யவில்லை என்றாலும் இதை மறுக்கவும் இல்லை. பொதுவாக, பிக் பாஸ் நிகழ்ச்சியில் விஜய் டிவி நடிகர்கள், சினிமா நடிகர்கள், பாடகர்கள், வெளிநாட்டு மாடல்கள், சமூகவலைதள பிரபலங்கள் எனக் கலைவையாக போட்டியாளர்கள் தேர்வு இருக்கும். அந்த வகையில், அருண் தவிர்த்து தொகுப்பாளர் ஜாக்குலின், அஸ்வின் ஆகியோரது பெயர்களும் பரிசீலனைப் பட்டியலில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
+ There are no comments
Add yours