இந்த வாரம் திரையரங்கில் வெளியாகும் படங்கள்

Spread the love

சென்னை: இந்த வாரம் திரையரங்கில் வெளியாகும் படங்கள் குறித்து இங்கு பார்க்கலாம்.

கடந்த செப்டம்பர் ஐந்தாம் தேதி விஜயின் ‘GOAT’ படம் வெளியானது. மாஸ் ஹீரோ படம் என்பதால் பெரிதாக வேறு எந்தப் படமும் கடந்த வாரம் தமிழில் வெளியாகவில்லை. ஆனால், இந்த வாரம் வரிசைக்கட்டி படங்கள் வெளியாகிறது. தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில், ஹரிஷ் கல்யாண் நடிப்பில் இந்த வாரம் 20ஆம் தேதி வெளியாக இருக்கும் படம் ‘லப்பர் பந்து’. கிரிக்கெட் போட்டியை மையப்படுத்தி உருவாகி இருக்கும் இந்தப் படத்தில் அட்டக்கத்தி தினேஷ், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, பால சரவணன் உள்ளிட்டப் பலர் நடித்துள்ளனர்.

’உடன்பிறப்பே’ படத்தை இயக்கிய இரா. சரவணன் இயக்கத்தில் நடிகர் சசிகுமார் கதாநாயகனாக நடித்திருக்கும் ‘நந்தன்’ திரைப்படமும் இந்த வாரம் வெளியாகிறது. சசிகுமாருடன் நடிகர் சமுத்திரக்கனி இணைந்திருக்கிறார். இந்தப் படத்தில் சசிகுமாரின் வித்தியாசமான தோற்றமும் சசிகுமார்- சமுத்திரக்கனி கூட்டணியும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. கதாநாயகியாக ‘பிக் பாஸ்’ புகழ் நடிகை ஸ்ருதி பெரியசாமி நடித்திருக்கிறார்.

வாழ்வியல் சார்ந்த படங்களை எடுப்பதற்கு பெயர் போனவரான இயக்குநர் சீனு ராமசாமி இயக்கத்தில் நடிகர்கள் யோகிபாபு, ஏகன், பிரிகிடா உள்ளிட்டப் பலர் நடித்திருக்கும் ‘கோழிப்பண்ணை செல்லத்துரை’ படமும் இந்த வாரம் வெளியாகிறது. ஆக்லாந்து பன்னாட்டு திரைப்பட விழாவில் நாளை திரையிட இந்தப் படம் தேர்வாகி இருக்கிறது. இந்தப் படங்களோடு நடிகர் ஹிப்ஹாப் ஆதியின் ‘கடைசி உலகப்போர்’, நடிகர் சத்யராஜின் ‘தோழர் சேகுவாரா’, நடிகர் சதீஷின் ‘சட்டம் என் கையில்’ உள்ளிட்டப் படங்களும் வெளியாகிறது.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours