நடிகர் சிவகார்த்திகேயனின் ‘அமரன்’ படத்தின் மேக்கிங் வீடியோ வெளியாகி ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.
மேஜர் முகுந்த் வரதராஜனின் கதையை ‘அமரன்’ படமாக இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ளார். நடிகர் சிவகார்த்திகேயன் இந்தக் கதையில் கதாநாயகனாக நடித்துள்ளார். தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்தப் படம் வெளியாக இருக்கிறது. நாளை ஆகஸ்ட் 15 சுதந்திர தினம் என்பதால் படத்தில் இருந்து அதிரடியான ஆக்ஷன் காட்சிகளுக்கான மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டிருக்கிறது.
காஷ்மீரில் போர்க்களக் காட்சிகளை எப்படி உருவாக்கினார்கள் என்பதை மாஸான மேக்கிங் வீடியோவாக படக்குழு வெளியிட்டிருக்கிறது. கமல்ஹாசன் தயாரிப்பில் இந்தப் படம் உருவாகியுள்ளது. எல்லையில் இருக்கும் பாதுகாப்பு வீரர்களுக்கு சல்யூட் அடிக்கும் விதமாக இந்த வீடியோவை சமர்ப்பணம் செய்திருப்பதாக படக்குழு அந்த வீடியோவில் தெரிவித்துள்ளது. நேற்று, ’கொட்டுக்காளி’ டிரெய்லர் படவிழாவில் நடிகர் சிவகார்த்திகேயன் பேச்சு சர்ச்சையைக் கிளப்பி இருந்தது குறிப்பிடத்தக்கது.
+ There are no comments
Add yours