பிக்பாஸ் பிரதீப்பிற்கு திருமணம் !

Spread the love

’பிக் பாஸ்’ பிரபலம் பிரதீப் ஆண்டனிக்கு திருமண நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது. இந்த செய்தியை அவர் சமூகவலைதளங்களில் பகிர்ந்திருக்க அனைவரும் அவருக்கு வாழ்த்து சொல்லி வருகின்றனர்.

’அருவி’, ‘டாடா’, ‘வாழ்’ உள்ளிட்டப் படங்களில் நடித்து கவனம் ஈர்த்தவர் நடிகர் பிரதீப் ஆண்டனி. இயக்குநர் ஆக வேண்டும் என்ற கனவோடு இருந்தவருக்கு ‘பிக் பாஸ்’ தமிழ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசனில் போட்டியாளராகக் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால், அதில் பிரதீப் ஆண்டனியின் செயல்பாடுகளால் அவருக்கு ரெட் கார்டு கொடுக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார்.

இதற்கு சமூகவலைதளங்களில் கலவையான விமர்சனங்கள் எழ, இனி தனக்கும் பிக் பாஸூக்கும் சம்பந்தம் இல்லை என்றும், வைல்ட் கார்டில் கூப்பிட்டாலும் தான் செல்ல மாட்டேன் என்றும் அவர் சொல்லி இருந்தார். அப்போதே அவர் காதலிப்பதாக தகவல்கள் வெளியானது.

இதை உறுதிப்படுத்தும் வகையில், பிக் பாஸ் சுரேஷ் சக்ரவர்த்தியும் தனது யூடியூப் சேனலில் பிரதீப்பின் கேர்ள் ஃபிரண்ட் என அவரை அறிமுகப்படுத்தினார். ஆனால், அவரது பெயர் மற்றும் என்ன செய்கிறார் என்பது குறித்தான விவரங்கள் இதுவரை பிரதீப் ஆண்டனி தெரியப்படுத்தவில்லை. தனது நிச்சயதார்த்த புகைப்படங்களை அவர் தனது சமூகவலைதளப் பக்கங்களில் பகிர்ந்துள்ளார்.

நேற்று எனக்கு நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. எனக்குலாம் நடக்காதுன்னு நினைச்சேன். பரவாயில்லை! என்னையும் நம்பி பொண்ணு கொடுத்துருக்காங்க. 90’ஸ் கிட்ஸ் சாதனைகள். ஃபேமிலி மேன்’ எனக் கூறியுள்ளார். ரசிகர்கள் இந்த ஜோடிக்கு வாழ்த்துக் கூறி வருகின்றனர்.


Spread the love

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours