சென்னை: தமிழ் சினிமாவில் பாலியல் தொல்லை குறித்தான லிஸ்ட் எடுத்தால் 500 பேருக்கு மேல் தாண்டும் என நடிகை ரேகா நாயர் பரபரப்பு பேட்டிக் கொடுத்திருக்கிறார்.
ஹேமா கமிட்டி அறிக்கை மலையாள சினிமா மட்டுமல்லாது, தெலுங்கு, தமிழ் சினிமாவிலும் புயலைக் கிளப்பி இருக்கிறது. பல நடிகைகளும் ஹேமா கமிட்டிக்கு ஆதரவாக கருத்துத் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகை ரேகா நாயர் யூடியூப் தளம் ஒன்றிற்கு அளித்திருக்கும் பேட்டியில் தமிழ் சினிமாவில் நடக்கும் பாலியல் தொல்லை பற்றி பேசியிருக்கிறார்.
அவர், “தமிழ் சினிமாவிலும் பாலியல் சீண்டல்கள் அதிகம் இருக்கிறது. இதைப் பற்றி வெளியே சொன்னால் வாய்ப்புக் கிடைக்காது என்பதற்காகவே பலரும் வெளியே சொல்லத் தயங்குகிறார்கள். தமிழ் சினிமாவில் இதுபோன்று லிஸ்ட் எடுத்துப் பார்த்தால் 500 பேருக்கும் அதிகம் பேர் சிக்குவார்கள். இங்கு திறமையாளர்கள் மதிக்கப்படுவதில்லை. தங்கள் சொல்பேச்சை கேட்பவர்கள்தான் வேண்டும் என பல நடிகர்கள் நினைக்கிறார்கள்.
இந்தப் பிரச்சினையால் கேரளாவில் பல உச்ச நடிகைகள் ஊரை விட்டே ஓடியிருக்கிறார்கள். புகார் கொடுத்தால் நடவடிக்கை எடுக்கும் அளவுக்கு தமிழ் சினிமா சங்கங்கள் இல்லை என்பதுதான் உண்மை. விஷால் சொல்வதற்கு முன்பே நான் சம்பந்தப்பட்டவரை செருப்பால் அடித்தேன். ஆனால், என்னை எங்கே வைத்திருக்கிறீர்கள்? அடி வாங்கியவர் மீது இன்று வரை எந்த நடவடிக்கையும் இல்லையே?” எனக் கேள்வி எழுப்பி இருக்கிறார்.
+ There are no comments
Add yours