நடிகை ப்ரியா பவானி ஷங்கர் இந்தியன் 2 இசை வெளியீட்டு விழாவை தவிர்த்துவிட்டு தனது காதலருடன் ரொமாண்டிக் டிரிப் சென்றிருக்கிறார். அந்தப் புகைப்படங்களையும் பகிர்ந்து, ”உனக்காக என்னையும் எனக்காக உன்னையும் ஒன்று சேர்த்ததற்காக இந்த உலகத்திற்கு நன்றி சொல்கிறேன்” என உருகியுள்ளார்.
சின்னத்திரையில் செய்தி வாசிப்பாளராக இருந்து பெரிய திரையில் நடிகையாக வலம் வருகிறார் ப்ரியா பவானி ஷஙகர். இவரது கைவசம் தற்போது ‘இந்தியன்2’, ‘டிமாண்டி காலனி2’ ஆகிய படங்கள் உள்ளது. நேற்று முன் தினம் ‘இந்தியன்2’ படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டிருந்தனர்.
ஆனால், நடிகர் சித்தார்த்தும் ப்ரியா பவானி ஷங்கர் இருவரும் வரவில்லை. முன்பே கொடுத்த கமிட்மெண்ட் காரணமாக இசை வெளியீட்டு விழாவிற்கு வரவில்லை என்று சித்தார்த் கூறியிருந்தார். ப்ரியா பவானி ஷங்கரோ தனது காதலருடன் வெளிநாடு பறந்திருப்பதால் அவர் இசை வெளியீட்டு விழாவிற்கு வராமல் தவிர்த்திருக்கிறார்.
சிட்னியில் தனது காதலருடன் இருக்கும் புகைப்படங்களைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து, “சிட்னி என்னுடைய இரண்டாவது வீடு. எத்தனை முறை வந்திருந்தாலும் இங்கிருக்கும் மக்கள் அன்பாகவும், இந்த இடம் அழகாகவும் இருக்கிறது. ஆறு வருடங்களுக்குப் பிறகு இங்கு மீண்டும் நாங்கள் வந்திருக்கிறோம்.
எங்களுக்குப் பிடித்த இடத்தில் சாப்பிட்டு, காஃபி குடித்து, லாங் வாக் போய்விட்டு, நிறைய பேசி சிரித்து விளக்குகளால் மிளிர்ந்த இந்த இடங்களை ரசித்தோம். இந்தத் தருணங்கள் எப்போதும் எங்கள் நினைவில் இருக்கும். உனக்காக என்னையும் எனக்காக உன்னையும் ஒன்று சேர்த்து கொடுத்த இந்த உலகத்திற்கு நன்றி” என உருகியுள்ளார்.
+ There are no comments
Add yours