மணிரத்னம் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கவிருப்பதாக வெளியான செய்தி வெறும் வதந்தி என்பது உறுதியாகி இருக்கிறது.
த.செ.ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘வேட்டையன்’. லைகா நிறுவனம் தயாரித்து வெளியிட்டுள்ள இந்தப் படம் விமர்சன ரீதியாக கொண்டாடப்பட்டாலும், வசூல் ரீதியில் எதிர்பார்த்த வரவேற்பினை பெறவில்லை. இது திரையுலக வட்டாரத்தில் பெருமளவில் விவாதிக்கப்பட்டு வருகிறது.
தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ‘கூலி’ படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் ரஜினி. அதனைத் தொடர்ந்து ‘ஜெயிலர் 2’ படத்தில் நடிக்கவுள்ளார். அதற்குப் பிறகு மாரி செல்வராஜ், கார்த்திக் சுப்புராஜ் உள்ளிட்ட பலரும் ரஜினிக்கு கதைகள் கூறியிருக்கிறார்கள்.
இதனிடையே சில தினங்களுக்கு முன்பு வதந்தி ஒன்று இணையத்தில் பேசப்பட்டது. என்னவென்றால், மணிரத்னம் இயக்கத்தில் ரஜினி நடிக்கவுள்ளார் என்பதே. இது தொடர்பாக யாருமே உறுதிப்படுத்தாமல் இருந்தார்கள். ‘தளபதி’ படத்துக்குப் பிறகு இருவரும் இணைய இருப்பதாகவும் பலரும் கூறிவந்தார்கள். தற்போது “அப்படியொரு எண்ணமே இல்லை. இது குறித்து ரஜினிகாந்த் மற்றும் மணிரத்னம் இருவருக்கும் தெரியுமா என தெரியவில்லை” என்று சுஹாசினி மணிரத்னம் அளித்த பேட்டியொன்றில் குறிப்பிட்டுள்ளார்.
இதன் மூலம் மணிரத்னம் இயக்கத்தில் ரஜினி நடிக்கவுள்ளதாக வெளியான செய்தி வெறும் வதந்தியே என்று தெரியவந்துள்ளது.
+ There are no comments
Add yours