‘ஜில்லா’, ‘தர்பார்’ உள்ளிட்டப் படங்களில் நடித்த நடிகை நிவேதா தாமஸ் ஹேமா கமிட்டி அறிக்கை வருத்தமளிக்கக் கூடிய விஷயம் எனக் கூறியிருக்கிறார்.
கேரளத் திரையுலகில் ஹேமா கமிட்டி அறிக்கை பெரும் புயலைக் கிளப்பி இருக்கிறது. பல நடிகைகள், பாடகி, கதாசிரியர்கள் தாங்கள் பாலியல் அத்துமீறலால் பாதிக்கப்பட்டிருப்பதாக கடந்த வாரங்களில் அடுத்தடுத்து புகார் தெரிவித்திருக்கிறார்கள். கேரளத் திரையுலகம் மட்டுமல்லாது தெலுங்கு திரையுலகிலும் பெண்களுக்கு நடந்த பாலியல் அத்துமீறல்கள் பற்றிய அறிக்கையை அரசு வெளியிட வேண்டும் என நடிகைகள் சமந்தா, அனுஷ்கா உள்ளிட்டோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஹேமா கமிட்டி அறிக்கை பற்றி நடிகை நிவேதா தாமஸ் சமீபத்திய விழா ஒன்றில் மனம் திறந்துள்ளார். அதில் பேசிய அவர், “ஹேமா கமிட்டி அறிக்கை உண்மையிலேயே வருத்தம் அளிக்கக்கூடிய ஒன்றாக இருக்கிறது. பெண்கள் வீட்டில் இருப்பதைக் காட்டிலும் வேலை செய்யும் இடத்தில்தான் அதிக நேரம் இருக்கிறார்கள். அவர்களுக்கு வேலையிடத்தில் பாதுகாப்பு மிக அவசியம். ஹேமா கமிட்டி போல, பிற துறைகளிலும் பெண்களுடைய பாதுகாப்பிற்கு கமிட்டி அமைத்தால் நல்லது” எனக் கூறியிருக்கிறார்.
+ There are no comments
Add yours